எஸ்எம்எஸ் கட்டணங்கள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு 1 பைசா மட்டுமே என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
மொபைல் சர்வீஸ் நிறுவனங்களில் அழைப்புக் கட்டணத்தை விட அதிக காஸ்ட்லியானதாக இருந்தது எஸ்எம்எஸ்தான். ஆனால் இந்த எஸ்எம்எஸ் அனுப்ப 1 KBக்கும் குறைந்த அலைவரிசை இருந்தாலே போதுமாம். இதற்கான கட்டணம் ஒரு பைசாவுக்கும் குறைவுதான்.
ஆனால் பல நிறுவனங்கள் இன்றைக்கும் 50 பைசா முதல் 1 ரூபாய் வரை எஸ்எம்எஸ் கட்டணமாக வசூலித்துக் கொண்டு வருகின்றன.இந்த உண்மையை பத்திரிகைகள் சமீபத்தில் வெளிக் கொணர்ந்தன. இதனால் தொலைத் தொடர்பு ஆணையம் ட்ராய், 'பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் எஸ்எம்எஸ் கட்டணத்தை அதிகளவு நிர்ணயிக்கப்பட்டிருப்பது உண்மைதான். விரைவில் குறைத்துவிடுவோம்' என்று சமாளித்திருந்தது.ஆனால் மக்களுக்கு உண்மை தெரிந்து கடும் கோபத்திலிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட ரிலையன்ஸ், நேற்று எஸ்எம்எஸ் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.இந்த அறிவிப்பின்படி இனி 1 எஸ்எம்எஸ் 1 பைசா மட்டுமே.
ஒரு நாள் முழுக்க எஸ்எம்எஸ் அனுப்பினால் ரூ. 1 செலுத்தினால் போதும். எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பித் தள்ளலாம். ஒரு மாதம் முழுக்க எல்லையில்லை எஸ்எம்எஸ் அனுப்ப ரூ 11 செலுத்தினால் போதுமாம்.பார்தி ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோனும் இப்போது எஸ்எம்எஸ் கட்டண யுத்தத்தில் களமிறங்குகின்றன.
எப்படியோ பத்திரிகைகள் கலகம், எப்போதும் போல நன்மையில் முடிந்திருக்கிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment