Monday, November 2, 2009
நடிகைக்காக நடந்த சண்டை! மக்கள் பணம் அம்போ!
டைரக்டர் மு.களஞ்சியத்தின் ‘"என் கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் சீனுவாசன் படம் தயாரிப்பதாக சொல்லி மக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, தயாரிப்பாளர் சீனுவாசனை கைது செய்திருக்கிறார்!ஒரு நடிகைக்காக தயாரிப்பாளரும், டைரக்டரும் போட்ட சண்டையில் படம் நின்று போனது! இதுதான் இந்த சிக்கலுக்கு காரணம் என கிளுகிளு சங்கதிகள் தெரியவந்தது!இனி... அவரவர் வாய்ஸில் அவரவர் பிரச்சனை!சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரியும் ஏகாம்பரம் நம்மிடம் சொல்கிறார்.......""திருவண்ணாமலை வாலைசித்தர் ஆசிரமத்தில் நடக்கும் பூஜைகாரியங்களுக்காக மாதாமாதம் ஐநூறு, ஆயிரம்னு பணம் அனுப்புவேன்! இந்நிலையில் 2007-ம் வருஷம் எனக்கு ஒரு கடிதம் வந்தது! அதில்.... அகில இந்திய வாலைசித்தர் பேரவையின் பொதுச்செயலாளர் டாக்டர் சீனுவாசனும், அ.இ.வாலை சித்தர் பேரவை தலைவர் மு.களஞ்சியமும் சேர்ந்து ‘"என் கனவு நீதானடி' என்கிற படத்தை சிவகுரு ஃபிலிம்ஸ் என்ற பேரில் தயாரிக்கப் போறாங்க! களஞ்சியம் இயக்கி நடிக்கப் போறார்! இந்த படத்தயாரிப்பில் 50ஆயிரம் கட்டி ஷேர் வாங்கினால் லாபத்தில் பங்கு தரப்படும்! நஷ்டம் வந்தாலும் மூன்று ஆண்டுகளுக்குப்பின் உங்கள் முதலீடு திருப்பித்தரப்படும்னு சொல்லிருந்தாங்க! நானும் எனது உறவினர்களும் நகையை அடமானம் வச்சு ஐந்து ஷேர் வாங்கினோம்!06.02.08-ல் திருவண்ணாமலையில் பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்குச்சு! ஆனா கொஞ்ச நாள்லயே ஷூட்டிங் நின்னு போச்சு! பணத்தை திருப்பிக் கேட்டபோது இழுத்தடிச்சாங்க! அதான் புகார் கொடுத்தோம்!'' என்றார்! உடுமலைப் பேட்டை மஞ்சுளா, காஞ்சிபுரம் ராஜேந்திரன், பவானி அங்கப் பன் இப்படி பல ஊர்க்காரர்களும் நாலு,அஞ்சு பங்குகளை வாங்கி ஏமாந் திருக்காங்க!தயரிப்பாளர் சீனுவாசனின் அந்தரங்க உதவியாளரான அடிஅண்ணாமலை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரன் என்கிற சிவக்குமார் நம்மிடம் பல விவரங்களைச் சொன்னார்!""நான் வேலுபிரபாகரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் அஸிஸ்டெண்ட் ஆக இருந்தவன்! மூணு வருஷத்துக்கு முன்னாடி சீனுவாசன் நட்பு கிடைச்சது! ‘நான் படம் தயாரிக்கப் போறேன்! நீ என்கூடவே இருனு சொன்னார்! அதன்படி அவரோட கணக்கு வழக்குகளையெல்லாம் நான் பாத்துக்கிட்டேன்! களஞ்சியம் கதை சொல்லி ஒரு கோடியே 60லட்ச ரூபாய் பட்ஜெட் என சொன்னார்! அதன்படி சென்னை அசோக் நகரில் ஆபீஸ் போடப்பட்டது! மக்களிடம் வாங்கிய பணத்தில் முதல்கட்டமா களஞ்சியத் திடம் 36 லட்ச ரூபாய் கொடுத்தார் சீனுவாசன்! பூமிகா நடிக்கிறார், மீராஜாஸ்மின் நடிக்கிறார்னு சொல்லி கடைசியில் ‘"கற்றது தமிழ்' ‘அங்காடித் தெரு' ஆகிய படங்களின் நாயகி அஞ்சலி நடிப்பதாகச் சொன்னார் களஞ்சியம்! திருவண்ணாமலையில் பூஜை போடப்பட்டு உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி பகுதிகளில் பத்து நாள் ஷூட்டிங் நடந்தது! ஒருநாள் ‘""நான் பிரபல டைரக்டர்! அதனால்தான் மக்கள் பணம் கொடுத்திருக்காங்க! அதனால் என்னிடம் சரியா கணக்கு காட்டுங்க!'' என சீனுவாசனிடம் கணக்கு கேட்டார் களஞ்சியம்! இதில் இருவருக்கும் தகராறு! இன்னொருநாள் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் இரண்டு பெண்களை சீனுவாசனின் அறைக்கு அனுப்பிவைத்தார்! இது தெரிந்து களஞ்சியம் சண்டைக்குப் போனார்! தயாரிப்பாளரை சந் தோஷப்படுத்துறதுக்காக கதாநாயகியை ஏற்பாடு செய்வாங்க டைரக்டர்கள்! நீயும் அஞ்சலியை என்ரூமுக்கு அனுப்பு!' என்றார் சீனுவாசன்! கோபமான களஞ்சியம் ‘""நான் அஞ்சலியை லவ் பண்றேன்! கனவுல கூட அவளை நீங்க நெருங்க முடியாது!'' எனச் சொல்ல... தகராறு முற்றி படப்பிடிப்பு நின்னது! "அஞ்சலியை தொடாம படம் எடுக்குற ஐடியா இல்லை!'னு தயாரிப்பை கிடப்பில் போட்டுட்டார் சீனுவாசன்! எந்த சமாதானத்துக்கும் அவர் ஒப்புக்கல! மக்கள் பணத்தை கேட்டு என்னை நச்சரிக்க,,, நான் இவரை நச்சரிக்க... விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் சாரோன் சவுந்தரை வச்சு என்னை மிரட்டி அனுப்பிட்டார்!'' என்றார்!“""சிவக்குமார் மோசமானவன்! நியாயம் கேட்கப் போனதால் என்வீட்டில் பெட்ரோல் குண்டு போட்டான்! அதான் அவனை மிரட்டினேன்!'' என்றார் சவுந்தர்!சீனுவாசனை சந்தித்தோம்!""சிவக்குமார் பெரிய பிராடு! அவன் சொல்வதெல்லாம் பொய்! பப்ளிக் ஷேர் நினைச்சபடி வராததால் படம் நின்னு போச்சு! வரும் ஜனவரிக்குள் பப்ளிக் பணத்தை திரும்ப தந்திடுவோம்!'' என்றார்!டைரக்டர் மு.களஞ்சியத்திடம் பேசினோம்!""பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும்.... இப்படி பல நல்ல படங்களை இயக்கியவன் நான்! ‘"என்கனவு நீதானடி' படத்தின் தயாரிப்பாளர் நான் கிடையாது! என்னுடைய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய என்னுடைய கிரியேடிவிடி வேலைக்கு சம்பளம் கிடையாது! அதனால் என்னை வொர்க்கிங் பார்ட்னராக சேர்த்துக் கொண்டார் சீனுவாசன்! மற்றபடி மக்களுக்கும், எனக்கும் எந்தவிதமான நேரடி அக்ரிமெண்ட்டும் கிடையாது! சீனுவாசன் பக்தி மான்! பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்தபோது அவர் தன் மனைவி யுடன்தான் தங்கியிருந்தார்! அப்படியிருக்க அவர் கண்ட பெண் களோடு இருந்ததாக சொல்வது தவறு! அஞ்சலியை ‘"சத்தமின்றி முத்தமிடு' படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகப் படுத்தினேன்! அந்தப் படம் நின்று போனது! ஆனாலும் அஞ்சலி பெரிய நடிகையாகி விட்டார்! இருப்பினும் அறிமுகப்படுத்திய நன்றிக்காக ‘"என் கனவு நீதானடி' படத்தில் நடித்தார்! மற்றபடி நான் அவரை காதலிப்பதாச் சொல்வது அபத்தம்! காதலிக்கிற மனநிலையிலும் நான் இல்லை! சிவகுமாரன் நடவடிக்கை சரியில்லாத ஆள்! அவர் சொல்வதை நம்ப வேண்டாம்!'' என்றார்!நாம் இந்த செய்தியை சேகரித்த சில நாட்களிலேயே சீனுவாசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்! இப் போது சிவகுமாரும் கைதாகி யிருக்கிறார்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment