Tuesday, April 6, 2010

அடுத்தவர் சொத்தை அபகரிப்பவருக்கு...



shockan.blogspot.com

தஞ்சையின் பிரபலப் புள்ளிகளில் ஒருவரும்... தொழிலதிபருமான ஆர்.கே. குமாரை நில மோசடி விவகாரத்தில் போலீஸ் கைது செய்ய... பவர்ஃபுல் புள்ளிகளைத் தாண்டி இந்த கைது அதிசயம் நடந்தது எப்படி என மூக்கில் விரலை வைக்கிறார்கள் நகரவாசிகள்.

யார் இந்த ஆர்.கே.குமார்?

""தஞ்சைல ஒயின்ஸ் ராமநாதனைத் தெரியாத ஆளுங்க இருக்க முடியாது. மதுவிலக்கு அமலில் இருந்த காலத்திலேயே.. பாண்டிச்சேரி சரக்கைக் கொண்டு வந்து வித்து கல்லா கட்டியவர். பிறகு அரசியல் தாதாவான ஜோதியோட கைகோர்த்து தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் கள்ளச்சாராய பிஸ்னஸைப் பண்ணி ஓஹோன்னு வளர்ந்தார். இவருக்கு லோக்கல் அமைச்சர்களான உபயதுல்லா, பழனிமாணிக்க மெல்லாம் ரொம்ப நெருக்கம். அப்படிப்பட்ட ஒயின்ஸ் ராமநாத னோட சொந்தத் தம்பிதான் இந்த ஆர்.கே. குமார்''’என்று காதைக் கடித்தார் லோக்கல் புள்ளி.

ராமநாதன் கதை கிடக்கட்டும். இந்த ஆர்.கே.குமார் மீது என்ன புகார்?

புகார் கொடுத்த ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை டி.டி.யான டாக்டர் வேதாசலத்திடமே கேட்டோம்.

""எங்க பிளாட்டுக்கு பக்கத்து பிளாட்டை வாங்கிய வீ.கே.பாண்டியன் என் பவர்... அப்ப இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் துணையோடு எங்க பிளாட்டையும் தன் பிளாட்டோட சேர்த்து பட்டா போட்டுக்கிட்டு பிரச்சினை பண்ணினார். இந்த நிலையில் தான் ஆர்.கே.குமார் அந்த இடத்துக்கு பவரை வாங்கிக்கிட்டு... எங்க இடத்தை அபகரிச் சிட்டார். 50 லட்ச ரூபா இடம் இது. இது சம்பந்தமா புகார் கொடுத்தப்ப போலீஸ் கண்டுக்கலை. அப்புறம்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டேன். கோர்ட்டுதான் நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டது. எஸ்.பி.செந்தில்வேலன் நேர்மையா ஆக்ஷன் எடுத்து கைது பண்ணிட்டார்''’ என்றார் உற்சாகமாக.

ஆர்.கே.குமாரோடு போலி பட்டா தயாரித்த வி.ஏ.ஓ.கிருஷ்ண மூர்த்தி, தாசில்தார் வெங்கடேசன் ஆகியோரும் கைது செய்யப்பட் டார்கள். பெரும்புள்ளிகள் சிபாரிசுக்கு வரவில்லையா? என காக்கிகள் தரப்பில் கேட்டபோது

""ஏன் வரலை? எங்க டி.எஸ்.பி.யே குமாருக்கு சப்போர்ட்டா வந்தார். அப்புறம் பழனிமாணிக்கம் தரப்பில் வந்தாங்க. உபயதுல்லா தரப்பில் சேர்மன் தேன்மொழி கணவர் ஜெயபால் வந்தார். ஆனா எஸ்.பி. தெளிவா இருந்தார்''’’ என்கிறார்கள் மீசையை முறுக்கிவிட்ட படியே.

ஜாமீனில் வெளியே வந்திருக்கும் தொழிலதிபர் ஆர்.கே.குமாரோ ""டாக்டர் வேதாசலம் மருமகன் ஸ்ரீதர்பாபுவின் கிளாஸ்மேட் எஸ்.பி. செந்தில்வேலன். அமைச்சர்கள் பேசியும் அவர் என்னை விடலை. அவர்மீது நான் சட்ட ரீதியா நடவடிக்கை எடுப்பேன்''’ என்றார் காரமாய்.

இந்தப் புகார் குறித்து எஸ்.பி.செந்தில் வேலனிடம் நாம் கேட்ட போது... ""அவர் சொல்ற ஸ்ரீதர்பாபு யார்ன்னே தெரியலை. உயர்நீதிமன்றம் சொன்னபடி முறைப்படி விசாரிச்சிதான் நடவடிக்கை எடுத்திருக்கோம். இதில் யாரோட சிபாரிசையும் நாங்க கேட்கலை''’என்றார் புன்னகையோடு.

No comments:

Post a Comment