Thursday, April 29, 2010

பாகிஸ்தானுக்கு உளவு: மாதுரி குப்தாவின் கண்ணை மறைத்த காதல்-பணம்!


shockan.blogspot.com
காதலுக்காகவும் பணத்துக்காகவும் இந்திய ரகசியங்களை பாகிஸ்தானிய உளவுப் பிரிவினரிடம் விற்று வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் இஸ்லாமாபாத் தூதரகத்தில் பணியாற்றி பிடிபட்ட மாதுரி குப்தா.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீடியா பிரிவல் பணியாற்றி வந்த ஐ.எப்.எஸ் அதிகாரியான மாதுரி குப்தா (53), பாகிஸ்தான் உளவுப் பிரிவினருக்கு கடந்த 2 வருடஙகளாகவே ரகசியங்களை வி்ற்று வந்துள்ளார்.

திருமணமாகாத இவருக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவைச் சேர்ந்த ராணா என்பவர் பழக்கமாகியுள்ளார். இந்தக் காதலை வைத்தே ரகசியங்களை கறந்துள்ளது பாகிஸ்தான் உளவுப் பிரிவு.

இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய 'ரா' உளவுப் பிரிவு அதிகாரியான ஆர்.கே.ஷர்மாவிடமிடம் இருந்து மிக ரகசியமாக ஆவணங்களைப் பெற்று அதை ராணாவிடம் கொடுத்து வந்துள்ளார் மாதுரி.

இது குறித்து கடந்த சில மாதங்களாகவே மாதுரியை இந்திய உளவுப் பிரிவினர் கண்காணித்து வந்தனர்.

இந் நிலையில் 3 நாட்களுக்கு முன் சார்க் மாநாடு தொடர்பான பணிக்காக என்று டெல்லி க்கு வரவழைத்து அவரை இந்திய உளவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

30 ஆண்டுகள் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றிய மாதுரி குப்தாவின் இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது.

அவரிடம் ரா, ஐபி மற்றும் ராணுவ உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட மாதுரி, காதலுக்காகவும் பணத்துக்காகவும் ரகசியங்களை வி்ற்றதாகக் கூறியுள்ளார்.

மேலும் வெளியுறவுத்துறையில் நிலவும் குறைபாடுகளும் தனது இந்தச் செயலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

தன்னை உயர் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகவும், பதவி உயர்வு வழங்காமல் சிரமமான பணிகளை தன் தலையில் கட்டியதாகவும், செய்த வேலையை மதிக்காமல் தன்னை மட்டமாக நடத்தியதாகவும் மாதுரி கூறியுள்ளார்.

எனக்கு லண்டன் அல்லது அமெரிக்காவில் பணியை ஒதுக்குவார்கள் என்று காத்திருந்து காத்திருந்த ஏமாந்தேன். என்றும் கூறியுள்ளார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

No comments:

Post a Comment