Thursday, April 29, 2010

குட்டி தீவையே வாங்க முயன்ற நித்யானந்தா!


shockan.blogspot.com
இந்தோனேஷிய கடல் பகுதியில் குட்டித் தீவு ஒன்றை வாங்க நித்யானந்தா திட்டமிட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

நித்யானந்தாவிடம் ஏராளமான பணம் இருப்பதும், அதை பல்வேறு நாடுகளில் அவர் முடக்கி வைத்திருப்பதாகவும் தெரியவருகிறது.

அவரது பெங்களூர் தலைமை தியான பீடம் சார்பில் 4 வங்கிகளில் பல்வேறு கணக்குகளும், 2 டிரஸ்ட் கணக்குகளும் உள்ளன.

2003ம் ஆண்டு தியான பீட சாரிடபிள் டிரஸ்டும், 2005ல் நித்யானந்தா தியான பீட டிரஸ்டும் தொடங்கப்பட்டது. இவற்றின் கணக்குகளிலும் கோடிக்கணக்கில் பணம் உள்ளது.

இந்த இரு டிரஸ்டுகளும் கடந்த ஆண்டு தலா ரூ.5 கோடி மற்றும் ரூ.8.5 கோடி வரி செலுத்தியுள்ளன.

நித்யானந்தாவின் வீடியோ வெளியாகி வழக்குகள் பதிவானதும் இந்த வங்கி கணக்குகள் அனைத்தையும் கர்நாடக போலீசார் முடக்கிவிட்டன.

நித்யானந்தா ஏற்றுமதி- இறக்குமதி நிறுவனம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை அவரது தம்பி கோபிநாத் நடத்தி வந்துள்ளார்.

அதன்மூலம் கடவுள் சிலைகளை வெளிநாடுகளில் விற்றதன் மூலம் ஆசிரமத்துக்கு பல கோடி ரூபாய் கிடைத்தது. அந்த பணத்தை அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார்.

இது தவிர மற்ற நாடுகளில் உள்ள தியான பீட கிளைகளுக்கு வந்த பணம் ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாட்டு வங்கிகளில் முதலீடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வருமானத்தை அவர் இந்தியாவில் கணக்கில் காட்டவில்லை. இதனால் அது குறித்து அமலாக்கப் பிரிவினரிடம் போலீசார் தகவல் தந்து விசாரி்க்குமாறு கோரியுள்ளனர்.

தியான பீடம், டிரஸ்ட் இரண்டையும் தாண்டி நித்யானந்தாவுக்கு இன்னொரு தனியான கணக்கும் உள்ளது. அதிலும் ரூ. 32 கோடி இருப்பது கர்நாடக சிஐடி போலீசார் விசாரணை யில் தெரியவந்துள்ளது. இந்தக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

இதுபோல வேறு வங்கிகளிலும் நித்யானந்தாவின் பணம் உள்ளதா என்ற விசாரணை நடக்கிறது.

நித்யானந்தாவி்ன் 2 டிரஸ்டுகளிலும் அவரது செயலாளர் தனசேகரன் என்ற சதானந்தா, அவரது மனைவி ஜமுனா ராணி இருவரும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். அவர்களிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

மேலும் இந்த இரு டிரஸ்டுகளுக்கும் வருமான வரி விலக்கும் பெறப்பட்டுள்ளது. அந்த சலுகையை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு பிடுதி தியான பீடத்துக்கு வருமான வரித்துறையினர் இப்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இப்படி ஏராளமான பணம் கொட்டியதால் சிறிய தீவு ஒன்றை விலைக்கு வாங்க ஆசைப்பட்ட நித்யானந்தா, அதற்காக இந்தோனேசியாவல் சிலரை தொடர்பு கொண்டிருந்தாகவும் சிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment