Friday, April 2, 2010

பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது'' - நித்யானந்தா!




shockan.blogspot.com
ல்லாவற்றையும் விட்டு விடுவதற்குப் பெயர்தான் துறவறம். நித்யானந்தரோ துறவறத்தையே விட்டுவிட முடி வெடுத்துவிட்டார். அவருடைய மோசடிகள் ஒவ்வொன்றும் நக்கீரனால் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தனது ஆசிரமப் பொறுப்பி லிருந்தும் அறக்கட்டளைப் பொறுப்பி லிருந்தும் விலகுவதாக அவர் அறிவித் திருப்பது நக்கீரனால் ஏற்பட்ட நல் விளைவு என்றும், நக்கீரனுக்கு கிடைத்த வெற்றி என்றும் வாசகர்கள் நம்மைத் தொ டர்புகொண்டு தெரிவித்து வருகிறார்கள்.

தொட்டது அனைத்திலும் மோசடி என்று செயல்பட்டுவந்த நித்யானந்தாவுக்கு பல இடங்களிலிருந்தும் நெருக்கடிகள் தொடர்கின்றன. ஆசிரமத்திலிருந்த பெண் களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர், "ஏதாவது நடந்ததா' என்று விசாரிக்கும்போது.. "ஆமாம்' என்றே பதில் வருகிறதாம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பணக்கார பெண்மணி, நித்யானந்தரின் தீவிர பக்தர். ஆந்திராவில் ஒரு தேவி கோயிலையும் அதற்கு சொந்தமான நிலத்தையும் 10 கோடி ரூபாய்க்கு வாங்கிய அந்த பெண்மணி, அதை நித்யானந்தரின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ததுடன், அதை மெயின்ட்டெய்ன் செய்வதற்காக 50 லட்ச ரூபாயும் தந்திருந்தார். அந்தப் பெண் மணியின் மகளும் நித்யானந்தர் ஆசிரமத்திற்கு டிவோட்டியாக அனுப்பி வைக்கப்பட்டார். அந்தப் பெண் மீதும் நித்யானந்தர் கை வைத்துவிட்டார் என் பதை பணக்கார வீட்டுப் பெண்மணி அறிந்ததும் கடும் கோபமாகிவிட்டார். கோயிலையும் நிலத்தையும் திருப்பித் தரும்படி நித்யானந்தருக்கு நெருக்கடி கொடுக் கப்பட்டு வருகிறது. அத்துடன், தன் மகள் பெயர் வெளியே வரக்கூடாது என்பதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் மூலமாக நித்யானந்தருக்கு எதிராகப் புகார் கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறார் பணக்காரப் பெண்மணி.

அமெரிக்காவில் வசிக்கும் ஜெயின் சமூகத்தவரான போப்பட் என்ற பெரிய பணக்காரர், லாஸ் ஏஞ்ஜெல் ஸில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்திற்கான செலவு பற்றி கேட்டுவிட்டு, 5 மில்லியன் டாலரை உடனடியாக கொடுத்தார். நித்யானந்தர் மீது ரொம்பவே பக்தி செலுத்தி வந்த அவர், ரஞ்சிதாவுடன் சாமியார் இருக்கும் வீடியோ காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டார். இது மார்ஃபிங் வீடியோ என்று நித்யானந்தர் தரப்பு சொன்னதில் ஆறுதல் அடைந்ததுடன், இது மார்ஃபிங்தான் என்பதை நிரூபிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன், அமெரிக்காவில் உள்ள உயர் தொழில் நுட்ப தடயவியல் சோதனைக் கூடத்தில் அந்த வீடி யோவை பரிசோதனைக்கும் கொடுத்தார். அதனை ஆய்வு செய்த நிபுணர்கள், இது ஒரிஜினல் வீடியோதான் என்றும் இதில் இருப்பது நித்யானந்தரும் ரஞ்சிதாவும் தான் என்றும் சொல்ல, போப்பட் கடும் அதிர்ச்சி யடைந்துவிட்டார். இப்போது அவர் நித்யானந்தருக்கு எதிராகத் திரும்பியிருப்பதுடன், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு, சட்டபூர்வ நடவடிக்கைக்குத் தயாராகிறார்.

அமெரிக்காவில் நிறைய ஹோட்டல்களை நடத்தும் ஒரு குரூப், நித்யானந்தர் ஆசிரமத்துக்கு நிறைய பணம் கொடுத்துள்ளது. சமீபகாலமாக நித்யானந்தர் பற்றி வெளியாகும் உண்மைத் தகவல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த குரூப், மார்ச் 29-ந் தேதியன்று அவசர மீட்டிங் போட்டது. ஆசிரமத்திற்கு வாரி வழங்கிய 55 பேர் இதில் கலந்து கொண்டனர். ""நாம் டாலர் களாகக் கொட்டிக் கொடுத் திருக்கிறோம். ஆனால், இதற்கு நித்யானந்தர் தரப்பி லிருந்து எந்த ரசீதும் தர வில்லை. கணக்கு வழக்கை மெயின்ட்டெய்ன் செய்வதாக வும் தெரியவில்லை. நித்யா னந்தரின் பிரசங்கத்திலும் மெடிடேஷன் பயிற்சியிலும் மயங்கி நாம் அவருக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்தோம். நம்முடைய நம்பிக்கையையெல் லாம் அவர் மோசம் செய்துவிட்டார்'' என்று அந்த மீட்டிங்கில் பேசப்பட்டுள்ளது,.

இதையடுத்து, நித்யானந்தர் தரப்பில் பத்தானந்தா என்பவரைத் தொடர்புகொண்டு, "நாங்கள் கொடுத்த பணத்திற்கு கணக்கு வேண்டும்' என்று அமெரிக்காவைச் சேர்ந்தவர் கள் கேட்டிருக்கிறார்கள். "திடீர்னு பிரச்சினைகள் ஏற்பட்டதால் கணக்குகளெல்லாம் மிஸ் ஆயிடிச்சி. 6 மாசம் டயம் கொடுங்க. கணக்கு கொடுக்குறோம்' என்று சொல்லியிருக்கிறார் பத்தானந்தா. ""இவனுங்க எல்லோருமே ஃபிரா டுங்க. நாம சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டியதுதான்' என முடிவெடுத்திருக் கிறார்கள் அமெரிக்காவில் நித்யானந்தருக்கு வாரி வழங்கிய அந்த 55 பேரும். வீடியோ வெளியான திலிருந்து தலைமறை வாகவே இருந்த நித்யா னந்தா, "நான் இதை சட்டபூர்வமாக சந்திப்பேன். எது உண்மை என்பதை எடுத்துச் சொல்வேன். இந்த வீடியோவில் உள்ள சதியை அம்பலப் படுத்துவேன். இது மோசடியானது என்பதை நிரூபிப்பேன்' என்று அறிக்கைகள் மூலமாக சொல்லி வந்தார். அது அவரது பக்தர்களுக்கு நம்பிக்கையை அதிகப் படுத்தி வந்தது.

ஹரித்வார் கும்பமேளாவில் இருந்த நித்யானந்தர், அது ஒரு ஆன்மீக ஆராய்ச்சி என்று வீடியோ காட்சிகள் பற்றி சொன்ன போது, அவரது பக்தர்களுக்கு முதன்முறையாக அதிர்ச்சி ஏற்பட்டது. சட்டபூர்வமாக அதில் எந்த தவறும் இல்லை என்று பேட்டிகள் கொடுத்தபோது மேலும் அதிர்ச்சியடைந்தனர். நித்யானந்தர் எங்கே இருக்கிறார், எப்போது வருவார் என்று நம்பிக்கையிழந்து காணப் பட்டனர். நித்யானந்தர் பற்றிய மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிவர, இந்து மத சாமி யார்கள் மீதான விமர்சனங்களும் அதிகமாகின.

இந்நிலையில், நித்யானந்தர் டெல்லியில், தன்னிடம் தீட்சை பெற்ற ஒரு பிரம்மச்சாரினி வீட்டில்தான் தங்கியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு, அவரின் அழைப்பின் பேரில் ஆடிட்டர் குருமூர்த்தி சந்திக்கச் சென்றார். இந்து மதத்திற்கு ஏற்படும் அவப்பெயரைத் தடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கம். நித்யானந்தரிடம், "நீங்கள் கொஞ்ச காலம் இந்த ஆசிரம விஷயங்களிலிருந்து விலகி, தனித்தே இருங்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். மீடியாக்களின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி யிருக்கும் நிலையில், சாமியார் வேடத்திலிருந்து விலகி இருப்பது தனக்கும் நல்லது என முடிவு செய்தார் நித்யானந்தர்.

இதையடுத்து, மார்ச் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அவரது இணையதளத்தில் அந்த அறிவிப்பு வெளியானது. "என்னைப் பற்றி கடந்த 3 வாரங்களாக வெளிவந்த செய்திகள் குறித்து இந்து தர்மத்தின் மதிப்புமிக்க ஆச்சார்யார்களில் சிலரை ஹரித்வாரில் சந்தித்தேன். அவர்களின் கருத்துப்படி, காலவரையில்லாமல் தனிமையான ஆன்மிக வாழ்வை வாழ நான் முடிவு செய்துள்ளேன். நான் தியான பீடத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், அதனைச் சார்ந்த மற்ற அமைப்புகளில் வகித்த பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்' என்று அறிவித்திருந்ததுடன், "தியான பீடத்தைச் சேர்ந்த சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட சாதகர்களைக் கொண்ட ஒரு நிர்வாக குழு இனி தியான பீடத்தை நடத்தும்' என்றும் தெரிவித்திருந்தார். "தேவைப்படு மானால் மீண்டும் திரும்பி வருவேன்' என்றும் அந்த அறிவிப்பில் நித்யானந்தர் சொல்லியிருந் தார். மீடியாக்களிடமிருந்து தப்பிப்பதற்காக நித்யானந்தர் வெளியிட்ட அறிவிப்பு, ஒரேநாளில் 300 மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

அவரது இந்த அறிவிப்பு, ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களையும் பக்தர்களையும் அதிர வைத் திருக்கிறது. "நித்யானந்தருக்கிருந்த பேச்சுத் திறமை, ஹீலிங் பயிற்சியெல்லாம் வேறு யாருக்கும் கிடையாது. அவர்களால் எப்படி ஆசிர மத்தை நடத்த முடியும்?' என்று பக்தர்கள் தரப்பி லிருந்து கேள்விகள் வரத் தொடங்கியிருக்கின் றன.

தன்னுடைய ராஜி னாமா அறிவிப்பு, எதிர் பாராத விளைவுளை உண் டாக்குவதால் அதிர்ச்சி யடைந்திருக்கிறார் நித்யானந்தர். அவருடைய தரப்பிலிருந்து, அந்த அறிவிப்பு, சட்ட ரீதியான நட வடிக்கைகளி லிருந்து தப்பிப்பதற் காகத்தான். சுவாமிஜி திரும்பிவருவார்.

ஆசிரமத்தை நடத்துவார் என்று பக்தர் களுக்கு எஸ்.எம். எஸ்., இ-மெயில் கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் தாக்கல் செய்த மனு வில், நித்யானந் தரைத் தேடிக் கொண்டிருக் கிறோம் எனத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆசிரமத்தைச் சேர்ந்த வர்களும் பக்தர்களும் நித்யானந்தாவின் மோசடிகளை நமது நக்கீரனில் தோலுரிக்கும் லெனின் (எ) தர்மா னந்தாவை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். நித்யானந்தருக்கு எதிராக அவர்களின் மனநிலை வலுப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி யிலிருந்து நேபாளத்திற்கு நித்யானந்தர் சென்றுவிட்டார் என்பதுதான் லேட் டஸ்ட் தகவல்.

தன்னுடைய இருப்பிடம் பற்றிய உண்மைத் தகவல்களை சதா னந்தா, ப்ரணானந்தா போன்ற ஒரு சிலரிடம் மட்டும் தெரிவித்துள்ள நித்யானந் தர், "சின்ன வயதில் இத்தனை பிரபலம், ஏராள மான பணம், பெரிய பெரிய ஆட்களே என் காலில் விழுகிற நிலைமை, முதலமைச்சர்-மந்திரிகள்- அரசியல்வாதிகள் எல்லாரும் வழிபடும் தன்மை என்று எதிர் பாராத வளர்ச்சியை அடைந்தேன். எல்லாத் தரப்பிலும் செல்வாக்கும் அதிகாரமும் இருந்ததால் யார் நம்மை என்ன செய்துவிடமுடியும் என்று அசட்டையாக இருந்து, மோகத்தில் விழுந்துவிட்டேன். பெண்கள் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு ஆளாகிவிட்டேன். என்னுடைய மோகமும் சபலமும்தான் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டது' என்று சொல்லியிருக்கிறாராம்.

தன்னை கடவுள் என்று நம்பி வந்த அத்தனை பெண்களிடமும் காமுகனாக விளையாடியிருக்கும் நித்யானந்தருக்கு எல்லாத் தரப்பிலிருந்தும் நெருக்கடி முற்றியிருக்கிறது. சட்டத்தின் சந்து பொந்துகளை தேடிக்கொண்டிருக்கிறார் நித்யானந்தர். எல்லா பொந்துகளும் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன.




ஸ்விஸ் வங்கி யிலும் நித்யானந்தருக்கு அக்கவுண்ட் இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஆசிர மங்களுக்கு வந்த பணத்தை 2009-ம் ஆண்டே ஸ்விஸ் வங்கி கணக்கில் டெபா சிட் செய்து விட்டாராம் நித்யா னந்தர்.

No comments:

Post a Comment