Saturday, April 3, 2010

பாகிஸ்தான் மருமகளாகும் இந்திய மகள்!




shockan.blogspot.com
ந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கணை சானியாமிர்சா, பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப்மாலிக்கை திருமணம் செய்துகொள்ளவிருப்பது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே நடந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டு இந்த திருமணத்தை ஏற்பாடு செய்துள்ளனர் சானியா குடும்பத்தினர்.

சானியா குடும்ப உறவினரான ஹைதரா பாத் தொழிலதிபர் சோரப்மிர்சாவுக்கும் சானியா விற்கும் கடந்த வருடம் ஜூலையில் நிச்சயதார்த் தம் நடந்தது. 6 மாதத்திற்குப் பிறகு நிக்ஹாவை வைத்துக்கொள்ள இரு வீட்டாரும் பேசி முடிவு செய்திருந்தனர். ஆனால் இந்த நிச்சயதார்த் தத்தை ரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்த சானியாவின் தந்தை இம்ரான்மிர்சா, ""சோரப்பும் சானியாவும் பழகியதில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் எழுந்த தால் இருவருக்குமான நிச்சயதார்த்தத்தை ரத்து செய்திருக்கிறோம். சோரப் குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது'' என்று ரத்துக்கான கார ணங்களை அப் போது தெளிவு படுத்தினார். ஆனால், ""இந்த ரத்துக்கான உண்மையான காரணம் சோயிப்மாலிக்குடனான காதல்தான் என்று இப்போதுதானே தெரிகிறது'' என்கிறார்கள் டென்னிஸ் உலகத்தினர்.

இதனை நிரூபிப்பதுபோல சோரப்மிர்சாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், ""சானியாமிர்சா குடும்பத்திற்கு சோரப்மிர்சா புதிய சொந்தம் இல்லை. இரண்டு குடும்பத்தினரும் பல வருடங் களாக நட்பு வளர்த்த குடும்பம். அந்த வகையில் சானியாவுக்கும் சோரப்புக்கும் நல்ல நட்பும் உண்டு புரிதலும் உண்டு. இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொண்டனர். இதனை அறிந்த இரண்டு குடும்பத்தினரும், அவர்களின் விருப்பப்படியே நிக்காவை செய்து வைத்துவிடுவோமே' என்று ஆலோசித்த பிறகே நிச்சயதார்த்தத்தை நடத்தினார் சானியாவின் தந்தை. இப்படிப்பட்ட நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு திடீரென்று நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக சொல்லி, கருத்து வேறுபாடுகள்தான் காரணம் என்று சானியாவின் தந்தை சொன்னதில் எப்படி உண்மை இருக்க முடியும்? ஆக பாகிஸ்தான் வீரர் சோயிப்புடனான காதல் தான் உண்மையான காரணம் என்பது இப்போது தெரிகிறது'' என்கிறார்கள்.

""டென்னிஸ் தொடர்பான ஒரு கருத்தரங்கத்திற்கு கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தார் சானியா. முதன்முதலில் அங்குதான் சோயிப்பை சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்த நாட்களில் இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது சானியா வின் மீதுள்ள தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் சோயிப். அந்த காதலை சானியாவும் ஏற்றுக்கொள்ள, ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்திருப்பதால் தனது தந்தையுடன் பேசுமாறு சோயிப்பிற்கு யோசனை தெரிவித்துள்ளார் சானியா. அதேசமயம், சோயிப்பின் காதலை தனது குடும்பத்தினரிடம் சானியா தெரிவிக்க, அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அந்த சூழலில் பாகிஸ்தானில் உள்ள சோயிப்பின் குடும்பத்தினர் சானியாவின் தந்தை இம்ரான்மிர்ஷாவிடம் பேசினர். தொடர்ந்து நடந்த பேச்சில் சோயிப்-சானியா காதலை அங்கீகரித்தது சானியா குடும்பம். அந்த அங்கீகாரம் திருமணத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. இந்த காதலை சோரப் குடும்பத்தினரிடம் தெரிவித்து அவர்கள் ஒப்புக்கொண்டதன் பேரில்தான் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்கிற செய்தியை வெளிப் படுத்தினார் இம்ரான் மிர்சா'' என்கிறார்கள் டென்னிஸ் வீரர்கள்.

இப்படிப்பட்ட சூழலில், சானியாவின் திருமணத்திற்கு எதிராக கச்சை கட்டுகிற 'இந்து மக்கள் கட்சி'யினர் சானியாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். கோவை, கும்ப கோணத்தில் ஆர்ப்பாட்டம் செய்த இக்கட்சியினர் சானியாவின் உருவ பொம்மையை எரித்ததில் 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது காவல்துறை. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் முடிவில் இருக்கிறது இந்து மக்கள் கட்சி.

இதெல்லாம் எதற்கு என்று இக்கட்சியின் சென்னை மாவட்ட தலைவர் குமாரிடம் பேசியபோது, ""இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை தங்களின் சகோதரர்களாகத்தான் பாவிக் கிறார்கள் இந்துக்கள். அதனால்தான் முஸ்லிம் இனத்தை சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானும் சானியாமிர்சாவும் தங்கள் துறை யில் சாதிக்கிற போது அவர்களை தூக்கிப்பிடிக்கிறோம். பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். மத, இன வேறுபாடுகளை பார்ப்ப தில்லை.

இந்தியாவில் 10 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் பிரபலமான வர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு வர் கூடவா சானியாவிற்கு ஏற்ற துணையாக வோ, பொருத்தமானவராகவோ, தகுதியானவ ராகவோ இல்லாமல் போய்விட்டார்? இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் உறவு மோதல்கள் ஏகத்துக்கும் உச்சத்தில் இருக்கும் நிலையில், சானியா போன்ற பிரபலமானவர்கள் பாகிஸ் தான் மீது காதல் கொள்வது சர்ச்சைகளையே உருவாக்கும். இன்றைய சூழலில் விளையாட் டுத்துறைதான் இரு நாட்டுக்குமான வெறியை அதிகப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் பார்க் கிறோம். திருமணத்திற்கு பிறகு இந்திய மகளாக இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பாரா? பாகிஸ்தான் மருமகளாக பாகிஸ்தானுக்கு விசு வாசமாக இருப்பாரா? என்கிற கேள்வி எதிரொ லிக்கத் துவங்கிவிட்டது. பாகிஸ்தானுடன் நல்லுறவை வளர்க்க இந்தியா பலமுறை முயற் சித்திருக்கிறது. முயற்சித்தும் வருகிறது. ஆனால் இந்த நல்லுறவை ஒவ்வொரு முறையும் உதறித் தள்ளியிருக்கிறது பாகிஸ்தான். இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானின் காதலை சானியா தவிர்த்துவிட்டு இந்திய விசுவாசத்தை காட்டி யிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யாததால் அவரையும் அவரது குடும்பத்தையும் இந்திய அரசு நாடு கடத்த வேண்டும். இதனை வலியுறுத்தித்தான் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்'' என்கிறார்.

உள்ளூர் காதலிலும் பிரச்சினை; கடல் கடந்து போனாலும் விடமாட்டார்கள் போலிருக்கே!

No comments:

Post a Comment