Tuesday, April 27, 2010

சினிமா படப்பிடிப்பில் சாமி ஆடிய நடிகை


shockan.blogspot.com
மகனே என் மருமகனே படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது.


இந்த படத்தில் கதாநாயகி மலையாள நடிகையான ரூபஸ்ரீ ஆவார். இவருக்கு, `தேன்மொழி' என்று பெயர் சூட்டி, தமிழ் பட உலகுக்கு அறிமுகம் செய்கிறார், டைரக்டர் டி.பி.கஜேந்திரன்.


தேன்மொழிக்கு, சுத்தமாக தமிழ் பேச தெரியாது. அவர் கோவிலுக்கு வந்து முருகனை வணங்குவது போன்ற காட்சியை, டி.பி.கஜேந்திரன் படமாக்கினார். இதற்காக, முருகன் கோவில் `செட்' போடப்பட்டு, ஆகம விதிகளின்படி முருகன் சிலைக்கு அபிஷேகம்-ஆராதனைகள் நடந்தன.


முருகனுக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம் நடைபெற்றது. கதாநாயகி தேன்மொழி சாமி கும்பிடுவது போன்ற காட்சி படமாகிக்கொண்டிருந்தபோது, திடீரென்று தேன்மொழி, ``டேய்...'' என்று சத்தம்போட்டபடி, சாமி ஆடினார்.


கோவிலில் தேன்மொழியுடன் ஏராளமான பொதுமக்களும் சாமி கும்பிடுவது போல் அந்த காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதற்காக, துணை நடிகர்-நடிகைகள் 50 பேர் வரவழைக்கப்பட்டு இருந்தார்கள். தேன்மொழிக்கு அருள் வந்து சாமி ஆட ஆரம்பித்ததும், துணை நடிகைகள் ஓடிவந்து ஆரத்தி எடுத்தார்கள்.


உடனே தேன்மொழி, தமிழில் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தார். ``நான் இருக்கேன் மகனே...கவலைப்படாதே'' என்று டைரக்டர் டி.பி.கஜேந்திரனின் தலையில் கை வைத்து, ஆசி வழங்கினார். தமிழே தெரியாத அவர், சுத்தமாக தமிழ் பேசியதை பார்த்து, படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பரவசம் அடைந்தார்கள்.


சாமி ஆடிய தேன்மொழிக்கு, துணை நடிகை ஒருவர் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். அதை வாங்கி குடித்தபின், தேன்மொழி பழைய நிலைக்கு திரும்பினார்.

No comments:

Post a Comment