Saturday, April 3, 2010

திரைக்கூத்து!


shockan.blogspot.com



"மேட் ஃபார் ஈச் அதர்' என்பார்கள். யாராவது ஒரு ஜோடிக்குத் தான் இந்த வார்த்தையைச் சொல்லுவார்கள். ஆனால் "மேட் ஃபார் எவரிபடி' என்பது போல எல்லா ஹீரோக்களுக்குமே பொருத்தமானவராக இருக்கிறார் தமன்னா. தயாராகிவரும் "தில்லா லங்கடி' படத்தில் அம்மணியின் நடிப்பைப் பார்த்து யூனிட்டே அசந்து கிடக்கிறதாம். தமன்னா இல்லை என்பதற்காக ‘"கோ' படத்தையே இழந்த சிம்பு ‘தமன்னாவோடு ஒரு படத்திலாவது தம் கட்டிவிட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.




வந்துவிட்டது கேப்டன் டி.வி.!


"கேப்டன்' டி.வி.யை ஏப்ரல் 14-ல் துவக்குகிறார் விஜயகாந்த். திறப்பு விழாவிற்கு ரஜினி, கமல் உட்பட பிரபலங்கள் பலரையும் அழைக்க ஏற்பாடு நடக்கிறதாம். இன்னொரு விசேஷம்... அந்தச் சமயம் சென்னையில் கிரிக்கெட் போட்டிக்கு வரும் டோனியையும் சிறப்பு விருந்தினராக அழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது.




சேரன் கிளப்பிய சூடு!


"மாயாண்டி குடும்பத்தார்' படத்தைத் தந்த டைரக்டர் ராசுமதுரவன் அடுத்து "கோரிப்பாளையம்' படத்தை எடுத்து வருகிறார். இதுவும் உணர்ச்சிமயமான கதைதான். இந்த படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சேரன் "இப்போதெல்லாம் சேனல்களில்; கோடிகோடியாக செலவு செய்து விளம்பரம் கொடுக்க வேண்டி யிருக்கிறது. முடியாத சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்ன செய்ய முடியும்? விளம்பரம் தராத படங்களையோ, அல்லது ஒளிபரப்பு உரிமை வாங்காத படங்களை யோ சேனல்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் பல படங்கள் நன்றாக இருந்தும் தோல்வியை தழுவுகிறது. இதற்கு கவுன்சில் தலைவர் இராம.நாராயணன் முடிவு கட்ட வேண்டும்'' என சொன் னார். ‘""இதை பொது மேடையில் விமர்சிக்க வேண்டாம். தனியே உட்கார்ந்து பேசி ஆலோசிப்போம்' என சேரன் கிளப்பிய சூட்டை தணித்தார் இராம.நாராயணன்.




நல்லவரா? கெட்டவரா?


அம்மா வழியில் கோயம்புத்தூர் காரரான பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் தனது "பிரின்ஸ்' பட புரமோஷனுக்காக சென்னையில் நிருபர்களை சந்தித்தார். ஏழை குழந்தைகள் கல்விக்கு உதவ அறக்கட்டளை ஏற்படுத்தியிருப்பதாகச் சொன்ன விவேக் ஓபராய் ‘"டெல்லி மீடியாபேர்ஸன்கள் பத்தடி பாஞ்சா... தமிழ்நாட்டு மீடியா பதினெட்டடி பாய்றாங்க' என்றார்.

காரணம்... இந்தப்படத்தில் ஒரு முத்தக்காட்சி வருகிறது. இது குறித்து கேட்ட டெல்லி மீடியா "இந்த காட்சிக்காக பத்து டேக் வாங்கினீங்களாமே?' என கேட்க... நம்ம ஆட்களோ... ‘"பதினெட்டு டேக் வாங்கினீங்களாமே?' எனக் கேட்டதால்தான் தமிழ்நாட்டு மீடியாவுக்கு இப்படி சர்டிபிகேட் தந்தார் விவேக் ஓபராய்.

நித்யானந்தாவின் பக்தரான விவேக் ஓபராய் ‘"சாமியார் நல்லவரா? கெட்டவரா? என்பது கடவுளுக்கே தெரியும்' என எஸ்கேப் ஆனார்.




நித்யானந்தா வேடத்தில் வடிவேலு!


இருபத்தைந்து கெட்-அப்களில் வடிவேலு நடிக்கும் படம் "உலகம்'. இந்த உலகத்தில் எந்தெந்த ரூபத்தில் மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. இதில் வடிவேலு மிகப்பிரமாதமாக பயிற்சி எடுத்து வரும் கேரக்டர்... நித்யானந்தா.

No comments:

Post a Comment