Tuesday, April 6, 2010

வாழ்க்கை தீபத்தில் வண்ண ஒளி!

மாற்றுத் திறனாளிகளின் போற்றுதலுக்கு உரியவராகி விட்டார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வள்ளலார்.

27.3.10 அன்று திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறன் கொண்டோருக்கு தனியார் துறை களில் வேலை வாய்ப்பை உண் டாக்கித் தருவதற்காகவும் அவர்கள் சுயதொழில் செய்வதற்காக வங்கிகளில் கடன் உதவி பெற்றுத் தருவதற்காகவும் ஒரு சிறப்பு முகாமை நடத்தியது.

சுமார் 1500 மாற்றுத் திறனாளிகள் பங் கேற்ற இந்த முகாம் வாசலில் காத்திருந்து, விசாரித்தோம்.

முருகன் (நிலக்கோட்டை) : தங்க நகைக்கு பாலிஷ் போடுற வேலை தெரியும். கனரா வங்கி மேலாளரிடம் சொல்லி, ஒண்ணரை லட்சம் லோனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் கலெக்டர். எனக்கு இப்பதான் விடிவுகாலம்... (சொல்லிக் கொண்டே இரண்டு கைகளால் நடந்து சென்றார்.)

சத்தியா (பழனிக்காரர். ஒற்றைக் கையை தரையில் ஊன்றியூன்றி உடம்பை இழுத்துத் தவழ்ந்தபடி வந்தார்) : கம்ப்யூட்டர் படிச்சிருக்கிற எனக்கு ஒரு கம்பெனியில் 5000 சம்பளத்தில் அக்கவுண்ட்டண்ட் வேலை கிடைச்சிருக்கு.

ராதாகிருஷ்ணன் (சின்னா ளப்பட்டிக்காரர். நண்பரின் முது கில் சவாரி செய்தபடி வந்தார்): இப்படியொரு முகாமை மாவட்ட நிர்வாகம் நடத் தியதால்தான் எனக்கு தியாகராஜா மில்லில் கிளார்க் உத்தியோகம் கிடைத்தது.

இராமச்சந்திரன் (திண்டுக்கல் காரர். பார் வையற்றவர்) : நானும் இன் னும் 26 பேரும் பிளாட்பாரத் தில் உட்கார்ந்து நாற்காலிக்கு பிளாஸ்டிக் ஒயர் பின்னித்தான் வயிறு வளர்க் கிறோம். முகா முக்கு வந்தி ருக்கிற எல்லா கம்பெனிகளும் இனிமேல எங்க ளுக்கு ஒயர் பின்னு கிற வேலையைத் தருவதாக பிரா மிஸ் பண்ணிருக்காங்க.

மலர்விழி (திண்டுக்கல்காரர்) : எம்.ஏ. கோ-ஆபரேட்டிவ் படிச்சு முடிச்சு 17 வருஷமாச்சு. என் தங்கை திவ்யலட்சுமி பி.டெக். முடிச்சு 2 வருஷமாச்சு. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப குள்ளமா இருப்பதால் யாரும் வேலை தரலை. சுயதொழில் தொடங்க 5 லட்சம் லோன் கேட்டோம். ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறார் கலெக்டர்.

மாற்றுத்திறன் கொண்டோரின் வாழ்வில் நம்பிக்கையூட்டும் விதமாக முகாம் நடத்திய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வள்ளலாருக்கு நன்றி கூறினோம். ""மாற்றுத் திறனாளிகளுக்கு நிறைய சலுகைகள், உதவிகள், திட்டங் களை அரசாங்கம் செய்கிறது. ஆனாலும் அத்தனை பேருக்குமே வேலை தர இயலாதல்லவா? 90-க்கும் அதிகமான நிறுவனங்கள் மனப்பூர்வமாக ஆதரவு கொடுத்து இந்த முகாமை வெற்றி யடையச் செய்திருக்கின்றன. அதோடு 170 பேருக்கு சுயதொழிலுக்காக 86 லட்சம் வரை வங்கிகள் கொடுத்திருக் கின்றன'' பெருமித உணர்வோடும் வாடிய பயிர்கண்டு வாடிய உள்ளன்போடும் சொன்னார் கலெக்டர் வள்ளலார்.

No comments:

Post a Comment