Tuesday, April 6, 2010

மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் தியாகங்கள் புரியத் தயாராக இருக்கின்றோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


மக்களின் நல்வாழ்வுக்காக கடந்த காலங்களில் நாம் தியாகங்கள் புரிந்துள்ள அதேவேளையில் தொடர்ந்தும் தியாகங்கள் புரியத் தயாராக இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

காரைநகர் கலாநிதி தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று (05) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்த காலங்களில் மக்களின் நல்வாழ்வுக்கான அபிவிருத்தி பணிகளை எப்படி முன்னெடுத்தோமோ அதே போன்று நிச்சயமாக எதிர்காலங்களிலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்.

அந்த வகையில் மக்களின் நல்வாழ்வுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் நாம் பல்வேறு தியாகங்களைப் புரிந்துள்ளோம். அதுமட்டுமன்றி எதிர்காலத்தில் மக்களுக்காக தியாகங்களை ஏற்கத் தயாராகவும் உள்ளோம் என்று அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

எனவே உங்களுக்கான உங்களது அடிப்படை மற்றும் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு சந்தர்ப்பம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலாகும். அத் தேர்தலை சரியாகப் பயன்படுத்தி அரசியல் பலத்தை மக்களாகிய நீங்கள் எமக்கு வழங்கும் பட்சத்தில் எதிர்கால வாழ்வை மேலும் வளமாக்கிக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

யாழ் மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உரையாற்றுகையில் 24 மணிநேரமும், மக்களின் தேவைகளை தன் தோள்களில் சுமந்து நாளும் பொழுதும் அயராது பாடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்தான் என்றால் அதை எவராலும் மறுக்க முடியாது.

எனவே மென்மேலும் மக்களுடைய விருத்திக்காகவும் வளர்ச்சிக்காகவும் வருகின்ற தேர்தல் சந்தர்ப்பத்தை சரியாகவும் உரிய முறையிலும் பயன்படுத்தி அமைச்சர் அவர்களையும் அவரது பேவட்பாளர்களையும் பாராளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களாகிய உங்களின் தலையாய கடமை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஈ.பி.டி.பி.யின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் உட்படப் பெருமளவு பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment