Tuesday, April 6, 2010

எங்கோ மிகப் பெரிய தவறு நடந்து விட்டது

டெல்லி: சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள தாக்குதல் மிகவும் கொடூரமானது. மனிதத் தன்மையே அற்றது. அவர்கள் விரித்த சதி வலையில் சிக்கி சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எங்கோ மிகப் பெரிய தவறு நடந்துள்ளது என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெறித் தாக்குதலில் 83 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கை அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில்,

உயிர்ப்பலி மிகவும் அதிகமாக உள்ளது. இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். அவர்களது கொடூரத்தனத்தின் இன்னொரு முகம் இன்று வெளிப்பட்டுள்ளது.

மாநில போலீஸாரும், சிஆர்பிஎப்பும் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியிருந்தனர். ஆனால் எங்கோ தவறு, மிகப் பெரிய தவறு நடந்துள்ளது. மாவோயிஸ்டுகள் விரித்த சதி வலையில், சிஆர்பிஎப் வீரர்கள் சிக்கியுள்ளதாகவே தெரிகிறது.

இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ப.சிதம்பரம்

No comments:

Post a Comment