shockan.blogspot.com
தி.மு.க உள்கட்சி அரசியல் மீண்டும் மீடியாக்களின் தலைப்புச் செய்தி யாகியிருக்கிறது. "கலைஞருக்குப் பிறகு யாரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்றும், அதற்கான தகுதியும் திறமையும் யாருக் கும் இருப்பதாகத் தெரிய வில்லை' என்றும் மத்திய அமைச்சரும் தென்மண்டல தி.மு.க அமைப்பாளரு மான மு.க.அழகிரி தெரிவித்திருந்தார். நமது நக்கீரன் இதழுக்கு முதல்வர் கலைஞர் அளித்த பேட்டியில், "ஜனநாயக இயக்கமான தி.மு.கவின் தலைவர் யார் என்ற முடிவை நிறைவேற்றுகிற அதிகாரம் எனக்கு கூட இல்லை -கட்சிக்குத்தான் உண்டு' என பதிலளித்திருந்தார். இந்நிலையில், வெளி நாட்டுப்பயணம் முடித்து திரும்பிய அழகிரி, ஜனநாயக முறையில் கட்சித் தேர்தல் நடைபெறும்போது போட்டியிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வரும் கட்சியின் பொருளாளருமான மு.க.ஸ்டாலின்தான் ஆட்சிக்கும் கட்சிக்கும் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அழகிரியின் அதிரடி அரசியல் அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பென்னா கரம் இடைத்தேர்தல் வெற்றியினால் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சிகரமான மனநிலையில் இருந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நக்கீரனுக்கு விரிவான பேட்டியளித்தார்.
பென்னாகரம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து களப்பணிகளை கட்சிப் பொறுப்பாளர்கள் மூலம் முடுக்கிவிட்டு, ஒவ்வொரு பகுதியின் நிலவரத்தையும் தன் விரல் நுனியில் துல்லியமாக வைத்திருந்ததுடன், 4 நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்து 36ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு காரண மாக இருந்தவர் மு.க.ஸ்டாலின். அ.தி. மு.க.வை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, டெபாசிட் இழக்கச் செய்து, அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி என்ற யூகப் பேச்சுக்கு தன் வியூகத்தால் முற்றுப்புள்ளி வைத்தி ருக்கிறார். அதிரடியும் பரபரப்பும் மிகுந்த அரசியல் சூழலிலும் எவ்வித பதற்றமுமின்றி நக்கீரன் கேள்விகளை தனது இயல்பான பொறுமையுடன் எதிர்கொண்டார் துணை முதல்வர்.
பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மு.க.ஸ்டாலின் : 2011 தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலில் தி.மு. கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் தமிழக மக்கள் தரப்போகும் வெற்றிக்கு முன் னோட்டமாக-கட்டியம் கூறுவதுபோல பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் வெற்றித் தீர்ப்பினை அளித்திருக்கிறார்கள்.
1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தி.மு.க-த.மா.கா என்கிற வலுவான கூட்டணியும் அதற்கு ரஜினி ஆதரவு என்கிற பெரும்பலமும் இருந்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான அலை பலமாக வீசியது. அப்படிப்பட்ட நிலையிலேயே பென்னாகரம் தொகுதியில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பா.ம.க.வுக்கு தனி செல்வாக்குள்ள தொகுதியில் தி.மு.க இப்படியொரு வெற்றியைப் பெற்றது எப்படி?
மு.க.ஸ்டாலின் : ஒரு சில தேர்தல்களில், ஒரு சில தொகுதிகளில் வெளிப்படும் எதிர்பாராத முடிவுகளை வைத்துக் கொண்டு, அந்தத் தொகுதியை அந்தக் கட்சிக்கே பட்டா போட்டுக் கொடுத்து விட்டதாக நினைத்துவிடக்கூடாது. 96-ல் தமிழகம் முழுவதும் வீசியது ஜெயலலிதா எதிர்ப்பு அலை. தற்போது தமிழகத்தில் வீசிக் கொண்டிருப்பது கலைஞர் ஆதரவு அலை. எதிர்ப்பு அலை எவருக்கு வேண்டு மானாலும் சாதகமாக இருக்கலாம். ஆதரவு அலை அதற்குரியவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். அதனால், 96-ல் கிடைத்த அவலை நினைத்து உரலை இடித்தவர்கள், வெறும் வாயை மெல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
பென்னாகரத்தில் 4 நாட்கள் பிரச்சாரம் செய்ததுடன், தேர்தல் கள நிலவரத்தையும் தொடர்ந்து கவனித்து வந்தீர்கள். இந்த வெற்றியை உங்களின் அரசியல் வியூகத்திற்கான வெற்றி எனக் கருதலாமா?
மு.க.ஸ்டாலின்: தி.மு.க.வின் வெற்றிக் காக தேர்தல் களத்தில் பணியாற்ற வேண்டி யது ஒவ்வொரு கழகத் தொண்டருக்கும் கடமையாக உள்ளது. கழகத் தலைமையின் கட்டளைப்படி, பென்னாகரம் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் பிரச்சாரம் செய்தோம். கலைஞர் அரசின் சாதனைகள் மிக விளக்கமாக வாக்காளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து வைக்கப் பட்டன. அந்த சாதனைகளால் பயன் பெற்றிருக்கும் மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து தி.மு.கழக வேட்பாளரை பெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இது தலைவர் கலைஞர் அரசின் சாதனைகளுக்கு கிடைத்த வெற்றி.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க.வின் பிரச்சார பலமாக உங்களின் சுற்றுப்பயணம் அமைந்தது. அத்தேர்தலில் பா.ம.க போட்டியிட்ட 7 இடங்களிலும் தோல்வியடைந் தது. பா.ம.க.வை திட்டமிட்டு தி.மு.க தோற்கடித்ததாக ராம தாஸ் கூறி வந்தார். இந்நிலை யில், பென்னாகரம் இடைத் தேர்தலில் பா.ம.க இரண் டாவது இடத்திற்கு வந்திருப்பதை அதன் புதிய வளர்ச்சி என ஒப்புக் கொள்வீர்களா?
மு.க.ஸ்டாலின் : நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு தி.மு.க காரணமல்ல. அவர்கள் மேற் கொண்ட விசித்திர மான முடிவுதான் காரணம். தி.மு.க.வின் வெற்றிக் காகத்தான் நாங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் பாடுபடுகிறோமே தவிர, யாருடைய தோல்விக்காகவும் நாங்கள் திட்டமிடுவதில்லை. பென்னாகரத்தில் பா.ம.க இரண்டாம் இடம் பெற்றிருப்ப தற்கு காரணம், அதன் வளர்ச்சியல்ல. பிரதான எதிர்க்கட்சியின் தளர்ச்சியும் சரிவுமேயாகும். வன்னியர் சமுதாயத்து மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் அமோக ஆதரவுடன் 36 ஆயிரம் வாக்கு களுக்கு மேல் கூடுதலாகப் பெற்று தி.மு. கழகம் வெற்றி பெற்றிருப்பதை பெரும் வளர்ச்சி என அவர்கள் ஏற்றுக்கொள் வார்களா?
2006-க்குப் பிறகு நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்பை மறுக்கும் விதத்தில், ஆளுங்கட்சியின் அதிகாரம்- பணபலம் மூலம் வெற்றிகள் தொடர்வதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறதே?
மு.க.ஸ்டாலின் : ஐந்தாவது முறையாக கலைஞர் அவர்கள் தமிழக முதல்வரான பிறகு, 11 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடை பெற்றிருக்கின்றன. இவை அனைத்திலும் தி.மு.க.வுக்கும் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கும்தான் மக்கள் வெற்றியைத் தந்திருக்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் மக்கள் பக்கம் உறுதியாக நிற்கிறோம். 5 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலை அ.தி.மு.க முற்றிலுமாகப் புறக்கணித்தது. மற்ற சில கட்சிகளும் சில தேர்தல் களங்களைப் புறக்கணித்தன. ஜனநாயகத்தில் தேர்தல்கள் மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்பைப் புறக்கணித்தவர் களை, அந்த ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் புறக்கணிக்கிறார்கள். அதனால்தான் பென்னாகரத்தில் அ.தி.மு.க தனது டெபாசிட் தொகையை இழந்திருக்கிறது.
இத்தகைய நிலை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையுடன்தான் பென்னாகரம் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார். மக்கள் தங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, தி.மு.க.வின் அதிகாரபலம்-பணபலம் என்று திரித்தும் திசைதிருப்பியும் சொல்வது, தங்கள் தோல்விப் புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையாகும்.
ஆட்சி செய்கிற தி.மு.க.வுக்கும் தனி மெஜாரிட்டி இல்லை. எதிர்க்கட்சிகளும் வலுவான நிலையில் இல்லை. இதை ஆரோக்கியமான அரசியல் சூழலாகக் கருதுகிறீர்களா?
மு.க.ஸ்டாலின் : பென்னாகரம் தொகுதியில் கிடைத்த வெற்றியுடன் சட்டமன்ற உறுப் பினர்களின் எண்ணிக்கையில் தி.மு.க சதம் அடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சிகள், அமைப்புகள் மற்றும் எக்கட்சியையும் சாராத உறுப்பினர்களின் நிலையான ஆதரவுடன் தி.மு.க அரசு அரசியல் சட்டப்படி தேவையான பெரும்பான்மையைப் பெற்று வலுவானதாகவே இருக்கிறது.
இவற்றிற்கெல்லாம் மேலாக மக்கள் ஆதரவு நிரந்தரமாகியிருக்கிறது. மெஜாரிட்டி- மைனா ரிட்டி என இருதரப்பு மக்களின் ஆதரவுடன் தி.மு.க அரசு வலுவாகவும் ஆரோக்கியமான செயல்பாடுகளுடனும் தொடர்வதை எதிர்க்கட்சியினரே மனசாட்சியுடன் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் வலுவான நிலையில் இல்லாததற்கு கழகம் பொறுப்பாக முடியாது. மக்கள் பிரச்சினையில் தாங்கள் எந்தளவு பொறுப் புடன் செயல்படுகிறோம் என்பதை அவர்கள்தான் உணரவேண்டும்.
மக்கள் நலனுக்காக நியாயமான முறையில் செயலாற்றும் எதிர்க்கட்சியினரின் குரலை மதித்து மக்களாட்சியின் மாண்புகளை மனதாரப் போற்றிச் செயல்படும் அரசாகத்தான் தி.மு.கழக அரசு நடைபெற்றுவருகிறது. தமிழக அரசியல் அப்பழுக்கற்ற நோக்கத்தோடு ஆரோக்கியமான பாதையில் நடைபோட வேண்டும் என்பதுதான் கழக அரசின் அணுகுமுறையாகும்.
அந்த அணுகுமுறை முக்கிய எதிர்க்கட்சி யான அ.தி.மு.கவிடம் இருக்கிறதா என்பதுதான் அனைவரும் விடை தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வியாகும்.
ஒரு மிதவாதியைப் போலவே உங்களின் அரசியல் செயல்பாடு தொடர்கிறது. நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்படும் அரசியல் களத்தில், அதிரடியாக செயல்படாவிட்டால் தாக்குப்பிடிக்க முடியுமா?
மு.க.ஸ்டாலின் : நான் மிதவாதியுமில்லை; தீவிரவாதியுமில்லை. அதிரடி அரசியலில் எனக்கு நம்பிக்கையுமில்லை. கட்சிக்கும், மக்களுக்கும் ஏற்றது எது என்பதை ஆய்ந்து அறிந்து, அதன்படி உறுதியோடும், நிதானத்தோடும் பணி செய்வதுதான் தலைவர் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கும் அரசியல் பாடம்.
ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மக்களுக்கான வீராணம் திட்டம் நிறைவேறியது. தி.மு.க ஆட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஏன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற முடியவில்லை?
மு.க.ஸ்டாலின் : கடல் நீரைக் குடிநீராக்கும் முதல் திட்டம் முற்றுப் பெற்று தொடங்கி வைக்கப்படும் நிலையை எட்டிவிட்டது. இரண்டாவது திட்டத்திற்கான பணிகள் நடை பெற தொடங்கியிருக்கின் றது.
மேயர்-உள்ளாட்சித் துறை அமைச்சர்- துணை முதல்வர் இந்த பொறுப்பு களிலிருந்து நீங்கள் நிறை வேற்றிய மக்கள் நலத் திட்டங்களில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எது?
மு.க.ஸ்டாலின் : மேயராக இருந்து சென்னையில் பத்து மேம்பாலங்களை நிறுவி சென்னை யை சிங்கார சென்னையாக அடித் தளமிட்டது -உள்ளாட்சித்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் வர லாறு படைத்துவரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் -துணை முதல்வர் என்ற பொறுப்பில் தமிழகத்தில் வேகமான தொழில் வளர்ச்சிக்கு ஆவன செய்து வருவது -இவையெல்லாம் முதல்நிலையில் எனது மனதை மிகவும் கவர்ந்தவை ஆகும்.
அரசியல் குறித்த உங்களின் தொலைநோக்குப் பார்வை, எதிர்காலத் திட்டம் என்ன?
மு.க.ஸ்டாலின் : தி.மு.கழகத்தின் கொள்கைகள் அனைத்தும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்தவை.
கலைஞர் தலைமையில் அவற்றை நிறைவேற்றி வருவதால் மிகச் சிறந்த எதிர்காலத்தை தொடர்ந்து பெறப்போகும் இயக்கம் தி.மு.கழகம் தான். தமிழ் மொழி யின் முதன்மைக்கும் தமிழரின் மேன்மைக் கும், தமிழகத்தின் நன்மைக்கும் பாடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் நிகழ்காலத் திட்டமும், எதிர்காலத் திட்டமும் ஆகும்.

No comments:
Post a Comment