Tuesday, April 6, 2010

சானியா வாழ்க்கை விளையாட்டு!


இந்திய டென்னிஸ் இளமைப்புயல் சானியா மிர்சாவிற்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும் வருகின்ற 15-ந் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த திருமணம் பற்றியும் இவர்களின் காதல் குறித்தும் விரிவாக கடந்த இதழில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இவர்களின் காதல், திருமண விவகாரம் கசியத் துவங்கியதுமே இதுபற்றிய சர்ச்சைகளும் அதிர்ச்சிகளும் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

ஹைதராபாத் தொழிலதிபர் முகமது சித்திக், ""என் மகள் ஆயிஷாவை 2002-ல் திருமணம் செய்துகொண்டார் சோயிப் மாலிக். முறைப்படி என் மகளை விவாகரத்து செய்துவிட்டு அதன்பிறகு சானியாவை அவர் திருமணம் செய்துகொள்ளட்டும், எங்களுக்கு ஆட்சேபனை இல்லை'' என்று ஒரு குண்டை வீச, சர்ச்சையும் அதிர்ச்சியும் எழுந்து பரபரப்பை உருவாக்கிவிட்டது.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த சோயிப்மாலிக் கின் மைத்துனர் இக்பால், ""ஆயிஷா என்பவர் யார் என்றே எங்களுக்குத் தெரியாது. சோயிப்பிற்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. பொய் குற்றச்சாட்டு கூறும் ஆயிஷா மற்றும் அவரது தந்தை மீது வழக்குப் போடு வோம்'' என்று கூறியதுடன் சித்திக்கையும் ஆயிஷாவையும் கடுமையாக மிரட்டி யுள்ளார் சோயிப்பின் மைத்துனர்.

இதனால் கடுப்பான சித்திக், ஹைதராபாத் பஞ்சாராஹில்ஸ் காவல் நிலையத்தில் சோயிப்மாலிக் மீது திருமண மோசடி செய்திருப்பதாக கிரிமினல் புகார் தந்துள்ளார். அத்துடன் பாகிஸ்தானில் உள்ள சோயிப்பின் வழக்கறிஞருக்கும், சோயிப்பின் மைத்துனருக்கும் -தனக்கும் சோயிப்பிற்கும் நடந்த திருமண ஆதார சான்றிதழை இணைத்து வக்கீல் நோட் டீஸ் அனுப்பியுள்ளார் ஆயிஷா.

ஆயிஷாவை தொடர்புகொண்டு பேசியபோது... ""இணையதளங்கள் மூலம் எங்களுக்கு நட்பு ஏற்பட்டதாகக் கூறுவது தவறு. துபாயில் உள்ள எனது உறவினர் வீட்டிற்கு நான் சென்றிருந்தபோது சோயிப்பை நான் சந்தித்தேன். இருவரும் செல்ஃபோன் நம்பர்களை பரிமாறிக் கொண்டோம். நான் இந்தியா வந்துவிட்டேன். அவர் துபா யிலும் பாகிஸ்தானிலும் மாறி மாறி இருந்தார். அடிக்கடி பேசினோம். ஒருகட்டத்தில் இருவருமே காதலை வெளிப்படுத்திக் கொண்டோம்.

எங்கள் காதல் உறுதியானதும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து பெற்றோர்களிடம் பேசி சம்மதம் பெற்றோம். இதனை அடுத்து, திருமண சான்றிதழை அவர் கையெழுத்துப் போட்டு அனுப்பி வைத்தார். நானும் கையெ ழுத்துப் போட்டேன். இதற்கு இரு தரப்பிலும் சிலர் சாட்சி கையெழுத்துப் போட்டுள்ளனர். திருமணத் திற்கு மாப்பிள்ளை வீட் டார் பெண்ணுக்கு மகர் தரவேண்டும். அதன்படி மகர் தொகை 500 ரூபாயும் அனுப்பி வைத்தார் சோயிப்.

இந்த வகையில் என்னை திருமணம் செய்து கொண்ட சோயிப், பலமுறை ஹைதராபாத் வந்துள்ளார். எனது வீட்டிலும் தங்கியுள்ளார். நாங்கள் பிரபல ஸ்டார் ஹோட்டல்களில் எங்களின் தாம்பத்யத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆயிஷா என்பது என் பாட்டி வைத்த செல்லப் பெயர். ஆனால் ஒரிஜினல் பெயர் மஹாசித்திக். ஒரி ஜினல் பெயரில்தான் திருமணச் சான்றிதழ் இருக்கிறது. எனது உடம்பு கொஞ்சம் பருமனாக இருக்கும். அந்த உடல் மீது ஆசைப்பட்டுதான் என்னை விரும்பினார் சோயிப். ஆனால் ஒருகட்டத்தில், அதையே குறையாகக் கூறி வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதையோ, சக நண்பர்களிடம் அறிமுகப்படுத்துவதையோ தவிர்த்தார் சோயிப். இதுபற்றி ஒருமுறை கோபமாக நான் கேட்டபோது, "உடல் பருமனை குறைத்துவிடு, அதன்பிறகு உன்னை வெளியே அழைத்துச் செல்கிறேன்' என்றார். இதற்காக, தீவிர முயற்சி எடுத்தேன். முடியவில்லை. இந்தச் சூழலில், 2007-லிருந்து என்னிடம் பேசுவதையும் என்னைப் பார்க்க வருவதையும் தவிர்த்த துடன் தனது செல்ஃபோன் உட்பட அவரது குடும்பத் தினரின் செல்ஃபோன் எண்களையும் மாற்றிவிட்டார் சோயிப். அதனால் கடந்த 3 வருஷமா தொடர்பில்லை. தற்போது, சானியாவை திருமணம் செய்துகொள்வதாக வந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தோம்.

சானியாவை அவர் திருமணம் செய்துகொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் எனக்கும் அவருக்குமான திருமணத்தை ஒப்புக்கொண்டுவிட்டு, முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு... சானியாவை அவர் திருமணம் செய்துகொள்ளட்டும்'' என்றார்.

இந்நிலையில் திருமண தேதி நெருங்கி வருவதாலும் திடீரென்று எழுந்த ஆயிஷா விவகாரத்தா லும் துபாயிலிருந்து ஹைதராபாத் வந்து சானியா வீட்டில் தங்கியுள்ளார் சோயிப் மாலிக்.

ஆயிஷா விவகாரம் குறித்து பேசிய சோயிப், ""ஆயிஷாவை ஒருபோதும் நான் சந்தித்ததே இல்லை. ஆனால், இணைய தளத்தில் "சாட்' பண்ணிக்கொண்டிருந்த போது அழகான ஒரு பெண்ணின் புகைப் படத்தை அனுப்பி என்னை இந்த ஆயிஷா மோசடி செய்திருக்கிறார். இது வரை யாரு டனும் எனக்கு திருமணம் நடக்க வில்லை. புகைப்பட மோசடிபோல, அந்த திருமணச் சான்றிதழும் ஒரு மோசடிதான்'' என்றவர், ""தற்போது நான் சந்தோஷமாக இருக் கிறேன். எந்த குழப்பமும் இல்லை. திட்ட மிட்டபடி எங்கள் திருமணம் நடக்கும்'' என்கிறார் புன்னகை மாறாமல்.

இந்த விவகாரத்தால் பதட்டமடைந் துள்ள சானியா மிர்சா, ""எல்லா பெண்களையும் போல திருமணம் குறித்த கனவிலும் மகிழ்ச்சியிலும் இருந்தேன். திருமணத்தின் போது எப்படியெல்லாம் என்னை அலங் கரித்துக்கொள்ள வேண்டு மென்று பல வாறு யோசித்தேன். ஆனா இந்த பிரச்சினை என்னை பதட்டமடைய வைத்திருப்பதால், அதுபற்றிய கவலைதான் இப்போது அதிகமாக இருக்கிறது'' என்கிறார். இந்நிலை யில், சோயிப் மீது கொடுக்கப்பட்டுள்ள மோசடி புகார் மீது வழக்குப் பதிவு செய் துள்ள காவல் துறையினர் அவரின் பாஸ் போர்ட்டை முடக்கியதால் சோயிப் கைது செய்யப் படலாம் என்கிற பரபரப்பு ஹைத ராபாத்தில் எதிரொலிக்கிறது.

இஸ்லாமிய திருமண விவகாரங்களில் காவல்துறை தலையிட முடியுமா? என்று இஸ்லாமிய அமைப்புகளிடம் கேட்ட போது... ""ஷரியத் சட்டப்படி எங்கள் திருமண விவகாரங்களில் காவல்துறை தலையிட முடியாது. அதனால் திருமண மோசடி என்கிற அடிப்படையில் சோயிப்பை கைது செய்ய முடியாது. அதேசமயம் வரதட் சணை கொடுமைகளின் பேரில் கைது செய்ய முடியும்'' என்கின்றன.

No comments:

Post a Comment