Tuesday, April 6, 2010

போலி மருந்தை எழுதும் டாக்டர்கள்!


தமிழகம் முழுக்க போலி மருந்துகள் பிடிபட்டுவரும் நிலையில்... கடலூர் மாவட்டத்திலும் அதிரடி ஆக்ஷனில் இறங்கி... இங்கும் ஒரு போலி டீமை வளைத்திருக்கிறார்கள் காக்கிகள்.

மாவட்ட மருந்து ஆய்வாளரான குருபாரதி ""செல்வ விநாயகர் ஏஜன்ஸியினர் "பெனட்ரில்' என்கிற இருமலுக்கான சிரப்புகளை போலியாக தயாரித்து விற்றுவருகிறார்கள்''’என திருப்பாதிரி புலியூர் போலீஸில் புகார் கொடுக்க... ஏஜென்ஸி உரிமையாளரான வள்ளியப்பன்... கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை 6 நாள் போலீஸ் கஸ்டடியில் எடுத்த காக்கிகள்... இன்ஸ்பெக்டர் சுந்தரவடி வேல் தலைமையில் தங்கள் பாணியில் விசாரித்தனர்.

கிடுக்கிப்பிடி விசாரணையில் வள்ளியப்பன்... தான் போலி மருந்துகளைப் பதுக்கி வைத்திருக்கும் இடங்களை ஒப்பித்ததோடு... பிரபல மருந்துக் கம்பெனிகள் பெயரில் போலி லேபில்களைத் தயாரித்துக் கொடுத்த முருகேசன் குறித்தும் தனது தொழிலுக்கு உறுதுணையாக இருந்த ஆனந்தன் குறித்தும் தகவல்களைக் கக்கினார். இவரது "போலி சேவை'க்கு உதவிய முருகேசனையும் ஆனந்தனை யும் உடனடியாக அள்ளிவந்தனர் காக்கிகள்.

போலியாய் பிரபல மருந்துக் கம்பெனிகளின் லேபிள்களை தயாரித்த முருகேசன் குறித்து விசாரித்தபோது...’’ அவர் பெயர் எல்டர் முருகேசன். எல்டர் என்ற மருந்துக் கம்பெனியில் முன்பு வேலை பார்த்ததால் இவர் பெய ரோடு எல்டர் ஒட்டிக்கொண்டது. கடலூர் மாவட்ட மெடிக்கல் ரெப் அசோஷியேசன் செகரட்டரியாக வும் இவர் இருக்கிறார்’’என்றனர் பலரும்.

வள்ளியப்பனின் தொழில்முறை தோஸ்த்தான ஆனந்தன் ஆரம்பத்தில் ரெப்பாக இருந்தவர். இப்போது செனோ என்ற மருந்துக் கம்பெனி யின் மேனேஜராக இருக்கிறார்.

போலி மருந்துகள் நடமாட காரணமாக இருப்பவர்கள் மெடிக்கல் ரெப்களும் மருந்துக்கடைக்காரர் களும்தான் என பரவலாக குற்றம் சாட்டப்பட... இது சரிதானா என நமது ரெப் நண்பர் ஒருவரிடமே கேட்டோம். அந்த ரெப் நண்பரோ ""இந்த போலி மருந்துகள் அதிகம் புழங்கக் காரணமானவர்களில் முக்கிய மானவர்கள் இன்றைக்கு இருக்கும் லாப வெறிகொண்ட டாக்டர்கள் தான்.

நாங்கள் டாக்டர்களிடம் மருந்துச் சாம்பிள்களுடன் போனால்... குவாலிட்டியான மருந்தா? மெடிசனின் மில்லி கிராம் சரியாக இருக்குமான்னு கேட்க மாட்டாங்க. ஆஃபர் இருக்கா? சர்வீஸ் இருக்கான்னுதான் கேட்பாங்க. ஆஃபர்னா... 10 பாட்டில் சிரப்புக்கு 5 பாட்டில் மருந்தை ஃபிரீயா கொடுக்கணும். 10 பட்டை மாத்திரைக்கு 5 பட்டை மாத்திரிரையை ஃபிரீயா கொடுக்கணும். சர்வீஸ்னா... அவங்க கிளினிக்குகளுக்கு பிரிட்ஜ், ஏ.ஸி. மெஷின் மாதிரி யான பொருட்களை அன்பளிப்பா கொடுக்கறது. இதில் காஸ்ட்லி மெடிசன் கம்பெனிகள்னா... ஃபாரினுக்கு ஃபேமிலி டூர் போகணும்னு டிமாண்ட் வைப்பாங்க. ஃபிளைட் டிக்கட் முதல் அங்க தங்குற செலவு, சாப்பிடற செலவு, தண்ணியடிக்கிற செலவுன்னு எல்லாத்தையும் மருந்து கம்பெனிகள் ஏத்துக்கணும். இன்னும் சில சபல டாக்டர்களுக்கு அந்த விஷயங்களையும் நாங்க ஏற்பாடு பண்ணிக்கொடுக்க வேண்டியிருக்கும். இவங்களாலும் போலி மருந்துகளை தயார் பண்ணி மருந்துக் கம்பெனிகள் புழங்கவிடுது''’’ என்றார்.

எப்படி? என்றோம்.

""பாண்டிச்சேரி திருபுவனை சாலையில் ஏகப் பட்ட மருந்துக் கம்பெனிகள் இருக்கு. அந்தக் கம்பெனிகளில் காய்ச்சலுக்கான பாராசிட்ட மால் 650 மில்லிகிராம் மாத்திரை ஒரு ஸ்ட்ரிப் ஒரிஜினல் விலை 2 ரூபாய் 50 காசு. இதே மாத்திரையை 60 காசு அடக்கத்துக்கு தயார் பண்ணச்சொல்வாங்க. அதனால் 650 மில்லிகிராமுக்கு பதிலா 150 மில்லிகிராமில் மாத்திரையைத் தயார்பண்ணிக் கொடுத்துடுவாங்க. இந்த மாத்திரைக்கு வீரியம் இருக்காது. அதனால் காய்ச்சல் நிற்காது. அதேபோல்தான் இருமல் சிரப் உட்பட அனைத்து மருந்துகளையும் குறைந்த அடக்க விலையில் தயாரித்து அதிக விலைக்கு விற்று... கிடைக்கும் லாபத்தில் டாக்டர்களின் மனதைக் குளிரவைக்கிறாங்க. இதைக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய டிரக் இன்ஸ்பெக் டர்கள் மாமூல் வாங்கிக்கிட்டு குறட்டைவிடுவாங்க''’என்றார் அவரே.

""இதய நோயாளிகளுக்கு கொடுக்கக்கூடிய செராடிக் என்ற தரமான மாத்திரையைத் தான் இந்தியா முழுக்க டாக்டர்கள் பரிந்துரைக்கி றார்கள். ஆனால் இங்கிருக்கும் பல டாக்டர்கள் டிஷ்யா சன்சைன் என்ற மாத் திரையைத்தான் பரிந்துரைக் கிறார்கள். காரணம் மேலே சொன்னதுக்கு ஆஃபர் இல்லை. இரண்டாவதாகச் சொன்ன சென்னை கம்பெனியின் மாத்திரைக்கு ஆஃபர் லாபம் உண்டு. அதேபோல் அல் சருக்கான "ஒமேஷுக்கு' பதில் பலர் "ஒமீ' என்ற மாத்திரையைப் பயன்படுத்து கிறார்கள். காரணம் 5 ரூபாய்க்கு விற்கப் படும் ஒமீயின் அடக்க விலை 60 பைசா தான்''’என்றார் டாக்டர் ஒருவரே.

ஹோமியோபதி டாக்டர் ப.உ.லெனினோ ""தமிழ்நாட்டில் 33 மாவட்டங்கள் இருந்த போதும் 15 டிரக் இன்ஸ் பெக்டர்கள் கூட இல்லை. எல்லா மாவட்டங்களிலும் இவர்களை நியமித்து தீவிர மாகக் கண்காணித்தால் தான் போலி மருந்துகளை முழுதாக ஒழிக்க முடியும்''’என்கிறார் அழுத்தமாய்.

மகப்பேறு மருத்துவர் டாக்டர் கோவிந்தம்மாளோ,

""சேவை மனப்பான்மையோடு மருத்துவத் துறைக்கு வருபவர்கள் இப்போது குறைந்துவிட்டார்கள். சில மருந்துக் கம்பெனிகளே பலரை மருத் துவம் படிக்க வைக்கிறது. பலருக்கு அன் பளிப்புகளை வாரி வழங்குகிறது. இப்ப டிப்பட்ட டாக்டர்கள் மருந்துக் கம்பெனி களுக்கு கைப்பாவையாகத்தான் இருப்பார்கள்'' என்கிறார்.

இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்து வரும் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸோ

""போலி மருந்தை விற்பது கொலை செய்வ தற்கு சமம். இத்தகைய குற்ற வாளிகளை தப்ப விடமாட் டோம். இன்னும் இந்த மாவட்டத்தில் இப்படிப் பட்ட குற்றவாளிகள் இருக் கிறார்களா? என துருவிக் கொண்டிருக்கிறோம்''’ என்கிறார் அழுத்தமாய். தமி ழகம் முழுவதும் இதே வேகத் தில் வேட்டை தொடரவேண்டும்.

No comments:

Post a Comment