shockan.blogspot.com
எண்பத்தி ஐந்து வயதைத் தாண்டிய தனது உயிருக்கும், ஏழு கோடி பெறுமானமுள்ள தனது உடை மைக்கும், பாதுகாப்புக் கேட்டு, தேனியில் இருந்து மதுரைக்கு தனியொரு ஆளாக வந்திருக்கிறார் ஒச்சம்மா பாட்டி.
தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து அவரிடம் மனுவைக் கொடுத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு வெளியே வந்தார் ஒச்சம்மாள் பாட்டி.
""உங்க சொத்தை சுருட்ட நினைக்கிறது யாருங்க பாட்டி?''.
""மானத்தில இருந்தா குதிச்சு வாரானுக? எல்லாரும் கூடப் பொறந்தவனுகளும்... அவனுக பெத்தவனுகளும்தான்... கடத்திக் கொண்டு போயி சொத்தை எழுதி வாங்கிட்டு கொலை பண்றதுக்காக வேன் எடுத்துக்கினு வந்து புட்டானுக. நான் செஞ்ச புண்ணியம்... என் ஆயுசு கெட்டியா இருந்திருக்கு... என்னை புடுச்சு வேனுக்குள்ள தள்ளுனப்ப நான் கூச்சல் போட்டதும் ஊர் ஜனங்க ஒண்ணு கூடிட்டாக... விட்டுட்டு ஓடிப்பொயித்தானுகப்பு... இல்லைனா சொத்துக்கு சொத்தும் போயி... உசுரும் போயிருக்கும்...!'' மிரட்சியோடு பெருமூச்சு விட்டார் ஒச்சம்மாள் பாட்டி.
பாட்டியின் கணவர் அம்மையப்பத்தேவர் தெய்மாகி ஆண்டு பலவாகி விட்டன. தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் அப்பா, அம்மா சீதனமாக எழுதி வைத்த பெருங்கொண்ட சொத்தை தன் உடன்பிறப்புகள் அபகரிக்கப் பார்க்கிறார்கள் என்பதுதான் ஒச்சம்மாள் பாட்டியின் புகார்.
""என் நிலத்தில ஒரு பகுதியை ஆக்கிரமிச்சு, அதில கம்பிவேலி போட்டு சீட்டுக் கிளப்பு நடத்துறானுக. நான் எஸ்.பி. கிட்ட புகார் கொடுத்து கையும் களவுமா புடிச்சும் கொடுத்தேன். இப்ப மறுபடியும் அதே இடத்தில் ராப்பகலா காசு வச்சு சூதாடுறானுக... இவனுகளுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் மூக்கையா மகன் சின்னப்பாண்டி சப்போட்டு... அவருக்கு நிலம் வாங்கி விக்கிறதுதான் பொழப்பு. இன்னும் 15 வருஷம் குத்துக்கல்லாட்டம் இருப்பேன். நான் பெத்த மகள் மதுரையில இருக்கிறாள்... எல்லாத்தையும் ஐ.ஜி. அய்யாவுகிட்ட சொல்லிப் பிட்டேன்... அவுக பாத்துக்கிடுவாக... '' கிளம்பினார் பாட்டி.
தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து, பாட்டி யின் புகார் பற்றிக் கேட்டோம்.
""சம்பந்தப்பட்ட 11 பேர் மீதும் விசாரித்து வழக்குப் பதிவு செய்யவும் பாட்டிக்கு பந்தோபஸ்து கொடுக்கவும், பாட்டியின் நிலத்தில் நடக்கும் சூதாட்ட கிளப்பை உடனே அப்புறப்படுத்தவும் சொல்லியிருக்கிறேன்!'' என்றார் அவர்.
""உங்கள் சப்போர்ட்டில்தான் எல்லாம் நடப்பதாக ஒச்சம்மாள் பாட்டி சொல்கி றாரே?'' தி.மு.க. மா.செ. மூக்கையாவின் மகன் சின்னப்பாண்டியிடம் கேட்டோம்.
""அந்தப் பாட்டி தன்னோட நிலத்தை ஈஸ்வரன் என்பவருக்கு பவர் குடுத்திருக்காங்க. அந்த ஈஸ்வரன்தான் என்னிடம் வந்தார். அந்த நிலம் வில்லங்கமான இடம் என்று தெரிந்ததும், எனக்கு வேண்டாமென்று சொல்லிவிட் டேன். என் தந்தையின் மா.செ. பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்தச் செயலிலும் நான் ஈடுபட மாட்டேன். பாட்டி சொல் லும் கடத்தல் முயற்சி, சீட்டு கிளப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது!'' என்றார் சின்னப்பாண்டி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment