புலிகளின் தலைமை கடந்த மே மாதம் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அழிக்கப்பட் நிலையில், புலிகள் இயக்கத்தின் தலைவர் என தன்னைதானே அழைத்துவந்த குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் (கே.பி) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்காசிய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டது நீங்கள் அறிந்ததே.தொடர்ந்து புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் கே.பி என்பவரே புலிகளுக்காக கடந்த காலங்களில் ஆயுதங்களை கொள்முதல் செய்து அனுப்பி வந்தவர் என்பதுடன் புலிகளின் சரக்கு கப்பல்கள் பலவற்றை வைத்து போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார்.
இவ்வாறு புலிகளுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்ட 10 கப்பல்கள் வரை இலங்கை கடற்படையினரால் தாக்கியழிக்கப்பட்ட நிலையில், கே.பி. வழங்கிய தகவலின் பிரகாரம் வெளிநாடுகளில் உள்ள புலிகளின் சொத்துக்கள் பல சர்வதேச பொலிஸாரின் துணையுடன் முடக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் முடக்கப்பட்ட மேற்படி புலிகளின் சொத்துக்களில் 3 கப்பல்கள் சர்வதேச நாடுகளின் துணையுடன் அடுத்த சில நாட்களில் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக முக்கிய அரச வட்டார தகவல்களில் இருந்து தெரியவருவதுடன், அடுத்து வரும் வாரங்களில் ஆசிய நாடுகளில் வைத்து முடக்கப்பட்ட புலிகளின் சொத்துக்கள் பல அம்பலத்திற்கு வரவுள்ளதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment