Thursday, December 17, 2009

கேணல் ராம் தலமையில் புதிய புலிப்படை அதிரடி! சிங்கள ராணுவம் பலி! - ஈழ யுத்த கள ரிப்போர்ட்!

ழத்தமிழர் இன்று எதிர் கொள்ளும் பேராபத்து, பொய்மைகள். எது உண்மை, எது பொய்... யார் சரியானவர்கள், யார் வேஷக்காரர்கள் என்பதைப் பிரித்தறிவது இன்று பெரும் பாடாயுள்ளது.
விடுதலைப் புலிகள் விட்ட இடத்தி லிருந்து ஆயுதப் போராட்டத்தை, முன்நடத்த "மக்கள் விடுதலை ராணுவம்' என்ற அமைப்பு சமீபத்தில் தன்னை பிரகடனம் செய்தது.
தமிழ் இணைய தளங்களெல்லாம் இச்செய்தியை தமிழர்கள் ஏதோ முல்லைத்தீவை மீளக் கைப்பற்றி விட்டதுபோல் கொட்டு முரசே கூறிக் கொண்டாடின. "மக்கள் விடுதலை ராணுவத்தின்' பிறப்பினால் ராஜபக்சே சகோதரர்கள் உதறல் பிடித்து உறக்கமின்றி தவிப்பதுபோலும் சில இணையக் கட்டுரைகள் எழுதப்பட்டன. ஆனால் உண்மை என்ன?
மக்கள் விடுதலை ராணுவத்தை உருவாக்கியிருப்பதே ராஜபக்சே சகோ தரர்கள்தான். கருக்கொடுத்து, உருவாக்கி, பிறப்பித்து இயக்கிக் கொண்டிருக்கிறவர் களே அவர்கள்தானென்ற உண்மையை தமிழர்களுக்கு எப்படி நாம் விளங்கப் படுத்துவது? கடந்த இரு இதழ்களில் எழுதியதைப் போல முக்கிய சில கார ணங்களுக்காகத்தான் இக்குழுவை இலங்கை அரசு உருவாக்கியுள்ளது. முக்கியத்துவம் கருதி மீண்டும் அவற்றை இங்கு எழுதுகிறேன்: தமிழர் தாயக நிலப் பரப்பை நிரந்தர ராணுவ ஆக்கிரமிப்பி லும், நிர்வாகத்திலும் வைத்திருப்பதற் கான ராணுவ நியாயம் தேடுவது முதல் நோக்கு; கட்டளைத் தொடர்பு களின்றி பல்வேறு இடங்களிலுமாய் சிதறுண்டு நிற்கும் போராளிகளை ஈர்த்து, பின்னர் அழித்தொழிப்பது இரண்டாவது நோக்கு; இன அழித்தல் கொடுமைகட்கு பழிதீர்க்கும் வெறியோடு களத்திலும், புலத்திலும் இருக்கிற புதிய தமிழ் இளையர்களை உள்வாங்கி, காயடித்து பின்னர் அழிவுக்குக் கையளிப்பது மூன்றாம் நோக்கு; இலங்கைக்கு உள்ளே தமக்கு வேண்டாத அரசியல் ராணுவப் புள்ளிகளையும், இலங்கைக்கு வெளியே காத்திரமான தமிழீழ ஆதரவாளர்களையும் அழித்தொழிக்கும் கூலிப்படையாய் பயன்படுத்துவது நான்காம் நோக்கு.
"மக்கள் விடுதலை ராணுவம்' அமைப்பது தொடர்பான முக்கிய உரையாடல்கள் லண்டனில்தான் நடந்ததாகச் சொல்லப் படுகிறது. சென்னையில் இலங்கை தூதரகத்தில் இருந்துகொண்டு இங்குள்ள பல தமிழர்களை கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டு இப்போது லண்டனுக்கு மாற்றலாகிச் சென்றுள்ள மனிதரும் இதில் முக்கிய பங்காற்றியதாகவும் சொல்லப்படுகிறது. ஆக, சிங்கள இனவெறியும் தமிழினத் துரோகிகளும் இணைந்து நடத்திவரும் எத்தனையோ சதி நாடகங்களில் "மக்கள் விடுதலை ராணுவம்' கடைசியாக வந்துள்ள ஆபத்தான ஓரங்க நாடகம். உலகத் தமிழர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்கு வார்களாக!
மக்கள் விடுதலை ராணுவம் போலவே உலகத் தமிழ் மக்களை, குறிப்பாக உணர்வாளர்களை தொடர் குழப்பத்திற்கு உள்ளாக்கி வரும் பிறிதொன்று கேணல் ராம் தொடர்பானது. முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் இறுதி போருக் குப்பின் சுமார் 500 போராளி களுடன் தம்மைப் பாதுகாத்துக் கொண்டு வெற்றிகரமாக கிழக்கு மாகாணக் காடுகளுக்குள் பின்வாங்கி களம் அமைத்து நின்ற ஒரே கேணல் தகுதி பெற்ற விடுதலை இயக்கத் தளபதி ராம் அவர்கள்தான். அவரைப் பற்றியும் அவரோடிருக்கும் போராளிகளின் உண்மையான எண்ணிக்கை பற்றியும் முன்னுக்குப் பின் முரணான, குழப்பியடிக்கும் பல செய்திகள் வந்தன, இடைவிடாது தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கின்றன.
கேணல் ராம் ராணுவ ஆய்வாளர்களின் ராடாரில் விழுந்தது 2007-ம் ஆண்டு. அவ்வாண்டில் இலங்கை ராணுவத்தின் 53, 57, 58-ம் டிவிஷன்களும் சிறப்பு கமாண்டோ அணிகளுமாய் மேற்கொண்ட தொப்பிகலா சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போது கணிசமான போராளிகள் சண்டையிட்டு மடிய, பெரும் ராணுவ முற்றுகையை உடைத்து வெளியேறிய ஒரே அணி கேணல்ராமின் அணி. அப்போது அவருக்கு உடன் துணை தளபதியாயிருந்த நகுலன் இப்போதும் ராமுடனே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
முல்லைத்தீவு களச் சமர்களில் ராமின் அணிகள் பெரிதாக ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால் ஏப்ரல் மாத இறுதியிலும் மே மாதத் தொடக்கத்திலும் வேலுப் பிள்ளை பிரபாகரன் அவர்களை களத்திலிருந்து பாது காப்பாக வெளியேற்றும் திட்டத்திற்காய் மிக முக்கியமான அணியாக கேணல் ராம் தலைமையிலான போராளிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக அப்போது செய்திகள் வந்தன. முல்லைத்தீவு ஆயுத மௌனிப்பிற்குப்பின் வில்பட்டு- யாலா காடுகளுக்குள் பாதுகாப்பாய் பின்வாங்கிச் சென்று நிலையெடுத்ததாய் கூறப்பட்டது.
தமிழீழக் கனவு உயிர்த்துடிப்பு கொண்ட யதார்த்த சாத்தியப்பாடாய் தொடர தமிழீழ தாயக நிலப்பரப்பு மற்றும் தமிழ் மக்கள் பாதுகாக்கப்படுவதும், உலக அரசியற் கருத்து தனித்தமிழீழத்திற்கு ஆதரவாய் மாறுவதும், இந்தியாவின் பாதுகாப்பு- வெளியுறவுக் கொள்கையும் அவ் வாறே மாறுவதும் முக்கியமாக நிகழ வேண்டும் என முன்னர் நாம் எழுதியிருந்த அதேவேளை களத்தில்- அதாவது இலங்கைக் குள் தமிழருக்கான வலுவான அரசியல் அணி யொன்று அமைவதும், மீண்டும் ஒரு கொரில்லா போராட்டம் தொடர்வதும் கூட முக்கியமான தொன்றாய் அரசியல் ராணுவ ஆய்வுக் கருத்தாகக் குறிப்பிட்டிருந்தோம். கொரில்லா போராட்டம் தொடர்வது பற்றி எழுதியபோது என் மனதில் நின்றவர் கேணல் ராம் அவர்கள் தான். அவருடன் சுமார் 400 போராளிகள் இருந்ததாக அப்போது கதைக்கப்பட்டது.
பின்னர், குறிப்பாக கடந்த மாவீரர் தினப் பின்னணியில் கேணல் ராம் பற்றி பலவிதமான செய்திகளும் கருத்துக்களும் தமிழ் வட்டங்களில் உக்கிரமாக உலவின. அவரது பெயரில் வெளிவந்த மாவீரர் தின உரை சர்ச்சைகளுக்கு மேலும் நெருப்பு மூட்டியது. அவர் இப்போது ராணுவப் பிடியில் இருப்பதாகவும், ராணுவம் அவரைப் பயன்படுத்துவதாகவும் கட்டுரைகள் எழுதப் பட்டன. விடுதலை இயக்கத்தின் கட்டளைக் கட்டமைப்பு குலைந்துபோய் தெளிவற்றிருந்த- தெளிவற்றிருக்கும் சூழலில் அக்கட்டுரைகள் மேலும் கேணல் ராம் தொடர்பான குழப்பங்களை அதிகமாக்கியது.
இப்போதும் இதுதான் உறுதியான உண்மை என்று எதையும் எழுதுகிற நிலையில் நாம் இல்லை. ஆயினும் புறச் சூழமைவுகளினடிப் படையில் சில அனுமானங்களை நாம் அறுத் தெடுக்க முடியுமென்ற கருதுகோளின்படியும், கடந்த இருமாத காலமாய் எனது பழைய வானொலி கள முகவர்கள், திருச்சபை நண்பர்கள், கொழும்பு ஊடக நண்பர்கள் என பலரோடுமான இடைவிடா தேடலின் பயனாகவும் சில செய்திகள் கிடைக்கின்றன. அவற்றை வாசகர்களோடும், தமிழுலகோடும் பகிர்ந்து கொள்ளத் தலைப்படு கிறேன். கேணல் ராம் மற்றும் சுமார் 500 போராளிகள் இருப்ப தாகக் கூறப்படும் கிழக்குப் பகுதிக் காடுகளில் நடந்த -நடக்கிற ராணு வப் புறச் சூழமைவுச் செய்திகள் முக்கியமானவை. அவையாவன:
கடந்த இரு மாத காலத்தில் கல்முனை, தொப்பிகலா, கரடிய னாறு ஆகிய மூன்று பகுதிகளை யும் மையப்படுத்தி, மூன்று ராணுவ நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன என்பதை எமது கொழும்பு தொடர்பாளர் கள் உறுதி செய்கின்றனர். வெளியே சொல்லப்படவில்லையென் றாலும் ஆங்காங்கே ஒருங்கிணைக் கப்பட்டும், ஒருங்கிணைக்கப்படா மலும், சில நேரங்களில் உணவுப் பொருட்கள் ஏற்பாடு செய்ய வருகையில் எதிர்பாரா விதத்தில் ராணுவத்தினரை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலுமாய், விடு தலைப்புலிகள் நடத்தி வரும் கொரில்லா தாக்குதல்களில் வாரத் திற்கு சராசரி நான்கு ராணுவத் தினர் கடந்த இரு மாதங்களில் மட்டுமே கொல்லப்பட்டு வரு கின்றனர் என்ற செய்தி பல தரப்பி னராலும் உறுதி செய்யப்படுகிறது. மேற்சொன்ன மூன்று நடவடிக் கைகளுமே கேணல் ராம் அவருடன் இயங்கும் அணிகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இப்பின்னணியில் காட்டுப் பகுதியில் கடந்த நவம்பர் 27-ம் தேதி ராணுவ வானூர்தி (ஐங்ப்ண்ஸ்ரீர்ல்ற்ங்ழ்) ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவம் பற்றி இலங்கை ராணுவம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட் டது. புதியதோர் விமான நிலை யத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது நடந்த வானூர்தி களின் வண்ண விளையாட்டின் போது தற்செயலான விபத்தில் அந்த வானூர்தி விழுந்து நொறுங் கியதாய் இலங்கை ராணுவம் மழுப்பியது. ஆனால் வானத்து வண்ண விளையாட்டில் ஈடுபட்ட வானூர்தி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்ததெப்படி என்ற கேள்விக்கு பதில் சொல்லப்பட வில்லை. அதுவும்கூட விழுந்த காட்டுப்பகுதி பற்றிய நிஜச் செய்தியும் மறைக்கப்பட்டதாய் கூறுகிறார்கள். நிஜத்தில் அந்த வானூர்தி விழுந்தது மின்னேரியா காட்டுப்பகுதி என்ற சந்தேகம் நிலவுகிறது. மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதியான மின்னேரியாவில்தான் கேணல் ராமும் அவரது அணிகளும் உள் நகர்ந்து நிற்கிறார்கள் என வந்து கொண்டிருந்த செய்திகள் வானூர்தி விழுந்து நொறுங்கியதன் பின்னணி தொடர்பான கேள்விகளையும் கூர்மையாக்கியது.
மின்னேரியா கடும் காடுகளோடு மலைத்திண்டுகளும் கொண்ட பகுதி எனப்படுகிறது. திண்டுகளில் நின்றுகொண்டு சிறு துப்பாக்கிகளாலேயேகூட வானூர்திகளை சுட்டு வீழ்த்த முடியும் என்கிறார்கள். ஒருவேளை கேணல் ராமின் அணிகள்தான் அவ்வாறு வானூர்தியை சுட்டு வீழ்த்தினவா என்ற கேள்வியும் இப்போது எழுப்பப்படுகிறது. இந்நிலையில் கிடைக்கும் உறுதியான செய்திகளின்படி மிகப்பெரிய ஒருங்கிணைக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையொன்று மின்னேரியா காட்டின் உட்பகுதி நோக்கி கடந்த வார இறுதியில் தொடங்கப்பட்டு மும்முரமாய் நடந்து வருவதாகவும், கருணா- பிள்ளையான் இருவரது அணிகளும் ராணுவத்தோடு பெரிய அளவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. மின்னேரியா காடுகளில் மிஞ்சியுள்ள கேணல் ராம் தலைமையிலான வீரர்களை அழித்தொழிப்பதுதான் இந்நடவடிக்கையின் ஒரே நோக்கு எனவும் உறுதி செய்யப்படுகிறது. ஆயிரம் வீரர்கள் தீயினில் போயினர், ஆயினும் போரது நீளும்! எனில் கேணல் ராம் ராணுவக் கட்டுப்பாட்டிற் குள் வந்துவிட்டதாக வந்த செய்திகளின் உண்மைத் தன்மை, பின்னணி என்ன? அதுபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இப்போதைய ராணுவக் கொள்கை என்ன? மின்னேரியா முற்றுகையை கேணல் ராமின் அணிகள் தாக்குப்பிடிக்க முடியுமா?

No comments:

Post a Comment