""அம்மா... தினமும் பசங்க காலேஜ் போகும்போதும் வரும் போதும் கிண்டல் பண்ணிக் கிட்டே இருக்கானுங்கம்மா, இதனால காலேஜ் போகவே பயமா இருக்கும்மா'' என்று திவ்யா அழுவதும், ""வயசுப் பசங்க அப்படித்தாம்மா இருப்பாங்க. நாமதான் அதை கண்டுக்காம படிப்புல கவ னமா இருக்கணும்'' என்று அம்மா விஜயா ஆறுதல் சொல்வதும் தொ டர்ந்துகொண்டிருந்தது.கடந்த 8-ந் தேதி நள்ளிரவு நேரம்... "அய்யய்யோ...' என்ற அலறல் சத்தம்... அழகான திவ்யாவை தீ தின்றுகொண்டிருந்தது. விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அள்ளிப் போட்டுக்கொண்டு ஓட... பாண்டிச் சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வேகமாக போகச் சொன்னார்கள் அரசு டாக்டர்கள். 10-ந் தேதி மரணத்தை தழுவினார் திவ்யா.நொந்துபோய் விசா ரணையில் இறங்கினோம். திவ்யாவின் நெருங்கிய தோழிகளோ... ""விழுப்புரம் டவுன் செல்வியம்மன் கோயில் தெருவில் திவ்யா வோட வீடு. அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. செகண்ட் இயர் படிச்சிக்கிட்டிருந்தா. ரொம்ப ரொம்ப தங்கமான பொண்ணுங்க. தேவையில்லாம ஆம்பளப் பசங்ககிட்ட பேசக்கூடமாட்டா. படிப்புல அவதான் முதல் மாணவி. ரொம்ப அழகாவும் இருப்பா. அதே ஊரைச் சேர்ந்த ராம்குமார்ங்கிற ராஸ்கலாலதான் நாங்க உசுரையே வெச்சிருந்த தோழி எங்களை விட்டுப் போயிட்டா...'' என்று கதறியபடியே பேசுகிறார்கள்.""அந்தப் பொறுக்கிப் பயலும் இதே காலேஜ்லதான் பி.காம். செகண்ட் இயர் படிக்கிறான். தினமும் திவ்யாவை பார்த்ததும் அவனோட ஃப்ரண்ட்ஸ்கள்ட்ட "என் ஆளு வருது பாருடா'ன்னு சொல்லி திவ்யா வோட காதுல விழற மாதிரி கத்தி கத்தி சொல்வான். ஒரு கட்டத்துல திவ்யாவை தேடிக் கிட்டு கிளாஸ் ரூமுக்குள்ளேயே வர ஆரம்பிச்சிட் டான். வரும்போ தெல்லாம் "டேய்... அண்ணியை பார்க் குறதுக்கு அண்ணன் வர்றேன் வழி விடுங் கடா'ன்னு சொல்லிக் கிட்டே வந்து திவ்யா மனசை வேதனைப் படுத்துவான். அதே மாதிரி சில பசங்களும் "அண்ணியை பார்க்க அண்ணன் வரார்டா'னு "அண்ணி வர்றாங்க ஒதுங்கு ஒதுங்கு'ன்னு ராம்குமாரோட ஃப்ரண்ட்ஸ் கருணாகரன் குரூப் பாட்டுப்பாடி கிண்டல்பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. இதையெல்லாம் பொறுத்துக்கிட்டுதான் திவ்யா படிப்புல மட்டும் கவனம் செலுத்திக்கிட்டிருந்தா. ஆனா அந்த படுபாவிப்பய ராம்குமார்... சொல்லவே வாய் கூசுதுங்க. சே... அவனால எங்க அன்புத்தோழியின் உசுரே போயிடுச்சு. இந்த மாதிரி ஈவு இரக்கமில்லாத ஈவ்டீசிங் பண்றவனையும் அதுக்கு துணைபோற பசங்களையும் தூக்குல போடணும்ங்க'' என்று கொந்தளிக்கிறார்கள் மாணவிகள் அழுகையும் ஆத்திரமும் பொங்க.அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு மாணவனோ... ""அந்தப் பொண்ணு இவன் பண்ற அட்டகாசங்களை எல்லாம் பொறுத்துக்கிட்டுதான் இருந்தது. ஆனா காலேஜ் முழுக்க ""மச்சான் நான் திவ்யாவை "மேட்டர்' முடிச்சுட்டேன். இனி எனக்கும் அவளுக்கும் டும்டும்தான்''னு எல்லார்கிட்டயும் பொய் பந்தா பண்ண... போலீஸ் கேஸ்னு போனா அவமானம்னு நெனைச்சு அவன் சொன்னதை பொறுத்துக்க முடியாம இப்படி ஒரு முடிவை எடுத்திருச்சு'' என்று "உச்' கொட்டுகிறார்.பெற்ற மகளை பறிகொடுத்த வேதனையில் மணி வண்ணன்-விஜயா தம்பதிகள் அழுது அழுது நீதிகேட்டு கதறிக்கொண்டிருக்க... கல்லூரி முதல்வர் ராதாவிடம் பேசினோம். ""நான் வந்து மூணு மாசம்தான் ஆகுது. ஈவ்டீசிங் நடந்ததா தெரியலை. திவ்யாவின் விஷயமும் எங்க கவனத்துக்கு வரலை. அட்லீஸ்ட் பெண் பேராசிரியர்கள் மூலமா திவ்யா விஷயத்தைச் சொல்லியிருந்தா ஆக்ஷன் எடுத்திருக்கலாம். நல்லா படிக்கிற திவ்யாவின் இறப்பு எங்களுக்கு இழப்புதான்'' என்கிறார் அவர்.திவ்யாவின் மரண வாக்குமூலத்தை வைத்து கைதுசெய்யப்பட்டிருக்கிறான் மாணவன் ராம்குமார். மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தன் சொந்த ஊரிலேயே ஈவ்டீசிங் மரணமா? என அதிர்ச்சியில்தான் இருக்கிறார். ""மாணவி திவ்யாவின் வீட்டுக்குச் சென்று அமைச்சர் ஆறுதல் சொன்னதோடு... அந்த குடும்பத்திற்கு சொந்த நிதியிலிருந்து பத்தாயிரமும் உதவித் தொகையாக கொடுத்திருக்கிறார். மேலும் ஈவ்டீசிங் செய்து உயிருக்கே உலைவைத்த மாணவர்களை சட்டரீதியாக தண்டிக்கவும் பரிந்துரை செய்திருக்கிறார்'' என்கிறது அமைச்சர் தரப்பு.மாணவியின் தெருவைச் சேர்ந்தவரும், நகர காங் கிரஸ் பிரமுகருமான குலாம் மொய்தீன் நம்மிடம்... ""பஸ் ஸ்டாண்ட், கல்லூரிகள், பள்ளிகள் உள்ள இடங்களில் ஈவ்டீசிங் செய்றதுக்குன்னே சுத்துற கும்பலை போலீஸ் கண்காணித்து துரத்தணும். கல்லூரி நிர்வாகங்களும் இது போன்ற விஷயங்களில் சீரியஸாக இருக்கணும்., பெண்களும் தயங் காம புகார் கொடுக்கணும்'' என்கிறார் கொந்தளிப்பாய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment