Wednesday, June 9, 2010
யுத்தம் 60 -நக்கீரன் கோபால்
shockan.blogspot.com
ராஜ்குமார் கடத்தப்பட்ட நாளிலிருந்து கர்நாடகம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. எல்.கே.ஜி.யிலிருந்து கல்லூரி வரை உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. பெங்க ளூரிலிருந்த தமிழ்ப் பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்பட்டன. தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்குமான போக்கு வரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இரு மாநில எல்லைகளிலும் பதட்டம் பரவிக்கொண்டே இருந்த நேரம். "எப்படியாவது ராஜ்குமாரை மீட்டு விடவேண்டும்' என்ற ஒரே எண் ணத்துடன் மீட்பு முயற்சியில் நக்கீரன் இறங்கியிருந்தது. நாட்டுக்குள் பதட்டத்தைத் தணிக்க வேண்டும் என்பதற்காக, "பெரியவர் ராஜ்குமாரின் காலை நான் தொட்டு வணங்க, அது காட்டுக்குள் பதட்டத்தை உண்டாக்கி விட்டது'.
வீரப்பனிடம் நிலைமையை எடுத்துச்சொல்லி சமாளிப்பதற்குள் போதும் போதும் என்ற நிலைமை. "கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள், பதட்டமில்லாத சூழ்நிலையில் இருந் தால்தான், இருமாநில அரசுகளும் உங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்கும். தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நல்ல விஷயங்கள் நடக்கும்' என்று எடுத்துச் சொன்னேன். மெல்ல மெல்ல வீரப் பனும் அவனுடன் இருந்த இயக்கத் தினரும் சமாதான மடைந்தார்கள். அதன்பிறகுதான், இரண்டாவது கட்ட பயணத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இரு மாநில நிலவரத்தை அறிந்து, ராஜ்குமாரின் காலைத் தொட்ட விவகாரம், காட்டுக்குள் புயலை ஏற்படுத்தி, வீரப்பனும் அவனுடன் இருந்தவர்களும் என் மீது கோபத்தைத் திருப்பக் காரணமாக இருந்தது. இந்த கோபத்தைத்தான், வீரப்பன் எனக்கு கொடுத்த தண்டனை என்று நினைத்துக்கொண்டு போலீசார் கேள்வி கேட்டனர். நான் அவர்களுக்கு விளக்கம் கொடுத்து முடித்தேன்.
சொல்ல மறந்து விட்டேன். 2-ம் கட்ட பயணம் முடிந்து கலைஞரிடமும், கிருஷ்ணாவிடமும் நடந்தவற்றை தெளிவுபடுத்தினேன். பேச்சுவார்த்தை டி.வி.யில் ஒளிபரப்பானது முக்கியமாக கன்னடத்தில் உதயா டி.வி.யில். அன்று இரவு ரஜினி 11 மணிக்கு போன்.
""நண்பா... நண்பா...'' சிறிதுநேரம் குரல் கேட்கவில்லை.
ரஜினியின் ஆனந்தக் கண்ணீர்.
தேம்பித் தேம்பி அழுகிறார்.
நான் ""என்னண்ணே... என்னண்ணே...'' என்றேன்.
""நீங்க ஜெயிச்சுட்டீங்க... உங்கள தப்பா சொன்ன ஃப்ரண்ட்ஸ் எல்லாம் திரும்பி லைனுக்கு வந்து வங்ள், ஏர்ல்ஹப் ண்ள் ற்ட்ங் ழ்ண்ஞ்ட்ற் ல்ங்ழ்ள்ர்ய் ற்ர் ழ்ங்ள்ஸ்ரீன்ங் ர்ன்ழ் தஹத்ந்ன்ம்ஹழ்'' என்றார்கள்.
""தேங்ஸ் கோபால்... தேங்ஸ்...'' என்றார் ரஜினி.
காட்டில் வீரப்பனைக்கூட சமாளித்து சமாதானப்படுத்த முடிந்தது. விசாரணை அதிகாரிகளை அவ்வளவு சீக்கிரமாக சமாதானப்படுத்த முடியவில்லை. ஏதேனும் ஒரு பொறியில் நான் சிக்கிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, மேலிடத்திலிருந்து சொல்லிக்கொடுக்கப்பட்ட கேள்விகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
""நீங்க ராஜ்குமார் காலைத் தொட்டதை வீடியோ எடுத்தப்ப, ஆஃப் பண்ணச் சொன்னது சேத்துக்குளி கோவிந்தன்னுதானே சொன்னீங்க. அவன்தான் அங்கே படைத் தளபதியா?'' என்றார் டி.எஸ்.பி.
""வீரப்பன்தான் ஆஃப் பண்ணச் சொன்னான். ஆனா கோவிந்தன்தான் வீரப் பனின் பலம்''. வீரப் பன் ஒன்றும் தனி ராணுவம் அமைத்திருக்க வில்லை. ஆனால், போலீசிடம் சிக்கி விடக்கூடாது என்பதில் எப்போதும் விழிப்பாக இருந்தவன். அவனுக்கு வலது கையாக இருந்தவன்தான் சேத்துக்குளி கோவிந்தன். என்சைக்ளோபீடியா என்பார்களே, அதுபோல காட்டுப்பகுதிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய என்சைக்ளோபீடியாதான் சேத்துக்குளி. யாரோடு எப்போது எந்த தாக்குதல் நடந்தது. எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், எத்தனை பேர் காயம் பட்டாங்க எல்லாவற்றையும் அவன் விரல்நுனியில் வைத்திருப்பான். வீரப்பனுக்கு நம்பகமான ஆள். வீரப்பனை ஏமாற்றும் நோக்கத்தோடு யார் காட்டுக்குள் வந்தாலும் அவர்களை சேத்துக்குளி கோவிந்தன் கண்டுபிடித்துவிடுவான். வீரப்பனை காட்டிக் கொடுக்கும் எண்ணத்தில் நேவி கேட்டருடன் (இடம் காட்டும் கருவி) காட்டுக்குள் பத்திரிகையாளர் போர்வையில் சென்றவர்களை கண்டு பிடித்து தண்டித்தது சேத்துக்குளிதான். அதனால்தான் அவன் வீரப்பனுடன் நெருக்கமாக இருந்தான்.
நாங்கள் வீரப்பனுடனும் அவனுடன் இருந்தவர் களுடனும் பேசிவிட்டு, ராஜ்குமார் இருக்கும் இடத்திற்கு கிளம்பியபோதுகூட, வீரப்பனின் கண்ணசைவை வைத்தே சேத்துக்குளி கோவிந்தன் வேகவேகமாகப் போய் ஒரு மரக்கொம்பை ஒடித்துவந்தான். நாங்கள் உட்கார்ந்திருந்த இடம், நின்று பேசிக்கொண்டிருந்த இடம், அப்படியும் இப்படியுமாக நடந்த இடம் என எல்லாப் பகுதிகளிலும் மண்ணை நிரவி சரிப்படுத்திக் கொண்டிருந்தான். என்ன காரணம் என்றால், ""எங்கள் காலடித் தடத்தை அங்கே விட்டு விடக்கூடாது'' என்ற கவ னம்தான். ""அப்படியே விட்டுவிட்டுப் போனால், பின்தொடர்ந்து வருகின்றவர்களுக்கு, இங்கேதான் இருந்திருக்கிறார்கள்'' என்று தெரிந்துவிடும். தாக்குதலில் இறங்கினால் எல்லா முயற்சிகளும் பாழாகிவிடும். இதையெல்லாம் கணக்குப்போட்டு அவர்கள் செயல்பட்டது ஆச்சரியமாக இருந்தது. நான் பல முறை சொன்ன விஷயத்தையேதான், என்னை விசாரித்த போலீஸ் அதிகாரிகளிடம் சொன்னேன்... வீரப்பனுக்கும் அவன் ஆட்களுக்கும் காடுங்கிறது கால்வந்த கலை.
விசாரணையின் மொத்த நாட்களான 10 நாட்களில் ஒவ்வொரு நாளாக கரைந்துகொண்டே இருந்தது. பொய் களை இழைகளாக்கி, போலீசார் நெய்திருந்த வலையில் நக்கீரன் சிக்கவில்லை. மேலிடத்திலிருந்து அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் கேள்விகள் வந்துகொண்டே இருந்தன. எல்லாக் கேள்விகளுக்கும் நக்கீரனிடம் நேர்மையான- தெளிவான பதில்கள் இருந்ததால், அவர்களின் முயற்சிகள் தோற்றுக்கொண்டே இருந்தன. என்னை சிக்க வைக்க முடியவில்லை என்றதும், நமது வழக்கறிஞர்களை டிஸ்டர்ப் செய்ய நினைத்தது போலீஸ் புத்தி.
பவானி பக்கத்திலிருக்கும் சங்கராண்டாம் பாளையத்தில் தலித்துகளுக்கும் உயர்ஜாதி யினருக்குமிடையே மோதல் ஏற்பட்டதில் தலித் சமு தாயத்தினர் தாக்கப்பட்டார்கள். தலித் மக்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தில் நமது வழக்கறிஞர் ப.பா.மோகன் கலந்துகொண்டார். இதை ஒரு காரணமாக வைத்து, ஜாதிக்கலவரத்தைத் தூண்டுகிறார் என்ற ரீதியில் அவர் மீதும் அவருடைய ஜூனியர்கள் மீதும் வழக்கு போட்டார் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம்.
7-வது நாள் விசாரணைக்கு ரெடியாகிக்கொண் டிருந்தேன். முதல்நாள் இரவிலிருந்தே எனக்கு கடுமையான கழுத்துவலி. என்னைப் பரிசோதித்த டாக்டர் ஜீவானந்தம், ""காலர் பெல்ட் போட்டுக்குங்க சார்'' என்றார். அவரது ஆலோசனைப்படி காலர் பெல்ட் போட்டுக்கொண்டு, விசாரணைக்குச் சென்றேன். கோபி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தின் முன் திரண்டிருந்த பத்திரிகையாளர்களுக்கும், காவலுக்கு நின்ற போலீசா ருக்கும் என் நிலைமை புரிந்தது. விசாரணை அதிகாரி களுக்கும் அது புரியும் என்றாலும், எனக்கு உடல் உபாதை ஏற்பட்டிருக்கிற நேரத்தில் எடக்குமடக்காக எதையாவது கேட்டு, என்னை சிக்க வைக்கலாமா என்பதிலேயே குறியாக இருந்தார்கள். ராஜ்குமார் கடத்தலைச் சுற்றியே மறுபடியும் கேள்விகள் வந்தன.
""இரு மாநில முதல்வர்களும் ஏன் உங்களை தூதுவரா அனுப்பினாங்க?''
""அவங்களுக்கு நக்கீரன் மேலே நம்பிக்கை இருந்ததால் அனுப்பியிருக்கலாம். என்ன காரணம்ங் கிறது அவங்களுக்குத்தான் தெரியும்.''
""கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் உங்களைத் தான் போகச்சொன்னாரா?''-டி.எஸ்.பி. நாகராஜன் சீரியஸாகக் கேட்டார்.
""ஆமாம்... அவரும் என்னைத்தான் போகச் சொன்னார். ஒ க்ஷங்ஞ் ஹ்ர்ன். உர்ய்'ற் ழ்ங்ச்ன்ள்ங்''னு கிருஷ்ணா கெஞ்சினார்.
தலையாட்டிக்கொண்ட டி.எஸ்.பி, ""ஆட்சியிலே இருக்கிறவங்க மாறினாலும் அரசு நிர்வாகமும் அதிகாரிகளும் ஒண்ணுதான். எல்லாமே அப்படியே நடைமுறையிலதான் இருக்கும்'' என்றார்.
""சார்.. அதைத்தான் நாங்களும் சொல்றோம். ஆட்சிகள் மாறினாலும் முன்பிருந்த உள்துறைச் செய லாளர்கள் கையெழுத்திட்டு, அரசாங்க முத்திரை போட்டுக்கொடுத்த உத்தரவாதக் கடிதம் நடைமுறை யில்தானே இருக்கும்?''
நான் கேட்ட கேள்விக்கு டி.எஸ்.பி. பதில் சொல்லவில்லை.
""ராஜ்குமார் மீட்பு முயற்சி முடிந்ததும் நீங்க அவனை குவாலிஸ், சுமோ கார்களில் ஏத்திக்கிட்டு வெள்ளிங்கிரி மலையில் கொண்டு போய்விட்டு தப்பிக்க உதவி செய்ததா தகவல் கிடைத்திருக்குது. உண்மைதானே?''
""உண்மைங்கிற பேரில் நீங்க எத்தனை பொய்யை வேணும்னாலும் சொல்லுங்க. ராஜ்குமாரை மீட்டபிறகு அவனை வவுனியாவுக்கு தப்பவிட்டதா ஒரு தகவலை பரப்பிவிட்டாங்க. இப்ப முதலமைச்சரா இருக்கிற வங்களும் (ஜெ.) அப்ப அதைச் சொன்னாங்க'' என்றேன். போலீசார் முகத்தில் ஈயாடவில்லை.
செல்போன் அழைப்பு வந்ததால் டி.எஸ்.பி. நாகராஜனும் இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமியும் அவசரமாக வெளியே போய் பேசினார்கள். விசாரணை நாட்கள் ஒவ்வொன்றாக கரைய... கரைய... செல்போன் அழைப்புகள் கூடிக்கொண்டே இருந்தன. ஒரு நாளைக்கு 10 முறையாவது இருவரும் வெளியே போய் செல்போனில் பேசிவிட்டு வருவது வழக்கமாக இருந்தது.
திரும்பி வந்தார்கள். ""ராஜ்குமாருக்கு எதிராக நான் ஏதாவது சொல்வேனா'' என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. நான் ஏதாவதுசொன்னால், அதை அப்படியே பதிவு செய்து ராஜ்குமாரிடம் தெரிவித்து, இப்படியெல்லாம் உங்களைப் பற்றித் தப்பாகச் சொல்கிறார் கோபால் என வலியுறுத்தி, எனக்கெதிராக அவரிடமிருந்து வாக்குமூலம் வாங்கி என்னைக் கைது செய்யவேண்டும் என்பதுதான் போலீசின் கணக்கு. அது தப்புக் கணக்காகவே முடிந்தது.
விசாரணை நாட்கள் முடிவடைவதற்குள் என்னைக் கைதுசெய்யும் வகையில் சிக்கவைக்க வேண்டும் என் பதுதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அசைன்மென்ட்.
""கோபால்... வீரப்பன் காட்டுக்கு நீங்க போனதே அங்கே இருக்கிற மலைகிராம மக்களை எங்களுக்கு எதிரா திருப்புறதுக்காகத்தான்னு தகவல் வந்திருக்குது.''
புதுசாக ஒரு குண்டை வீசினார் டி.எஸ்.பி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment