இரு தரப்பின் வாக்குமூலத்தையும்... சாமியார் போலீஸில் ஆஜராகாமல் சில போலீஸ் அதிகாரிகள் உதவியுடன் நழுவி வந்ததையும் உடனுக்குடன் நாம் ரிப்போர்ட்டாகத் தந்து வந்தோம். இந்த நிலையில் தனது உதவியாளர் மூலம் சாமியார் ஈஸ்வர குமார் தனது விளக்கத்தை எழுதி அனுப்ப... அதை ஏற்க மறுத்து... நேரில் ஆஜராகியே தீரவேண்டும் என கறாராய் உத்தரவிட்டது காவல்துறை.
இதைத் தொடர்ந்து சாமியார் திடீரென எஸ்கேப் ஆக... இவரைப் பிடிக்க டி.சி.சம்பத்குமார் ஸ்பெஷல் டீம் ஒன்றை அமைத்தார்.
இந்த டீம் சாமியாரின் மனைவிக்கும் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் வருகிற செல்போன்களை எல்லாம் ட்ரேஸ் பண்ண ஆரம்பிக்க... உஷாரான சாமியார் தனது செல்போன்களை ஆஃப் செய்துவைத்து போலீஸுடன் கண்ணாமூச்சு ஆடினார். சாமியாரின் மனைவிக்கு கர்நாடகாவில் இருக்கும் மந்திரா லயத்திலிருந்தும் பெங்களூரில் இருந்தும் இடையில் இரண்டு மூன்று கால்கள் மட்டும்வர.. அவர் கர்நாடகாவில்தான் பதுங்கி இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தது போலீஸ்.
எந்த வகையிலாவது சாமியார் தன் வீட்டைத் தொடர்புகொண்டே தீருவார் என கணித்த காவல்துறை மப்டியில் அவர் வீட்டைச் சுற்றி ஆட்களை நிறுத்தியது.இந்த நிலையில்... பல வி.ஐ.பி.க்களுக்கு பவர் புள்ளியாக இருப்பதாலும் பல வழக்குகளில் தான் சம்பந்தப்பட்டிருப்பதாலும் தன் வீட்டில் இருக்கும் ஃபைல்களை எல்லாம் பெங்களூருக்குக் கொண்டுபோகும் முடிவிற்கு வந்தார் சாமியார். இதன்படி அவரது டிரைவர் ஒரு இரவில் பாதி ஃபைல்களை அள்ளிச்செல்ல..
இதைத் தாமதமாக அறிந்த காவல்துறை... மேலும் ஆட்களை நிறுத்தி உஷார்படுத்தியது. பெங்களூரில் சர்வீஸ் அபார்ட்மெண்டில் பதுங்கியிருந்த சாமியார் இடைப்பட்ட காலத்தில்... போலீஸுக்கு பயந்து மூன்றுமுறை இடம் மாறியிருந்தார்.
இந்த நிலையில் 4-ந் தேதி இரவு மிச்ச ஃபைல்களை அள்ளிச்செல்ல... சாமியார் தன் டிரைவரை மீண்டும் வீட்டுக்கு அனுப்ப... டிரைவரை சைலண்டாக மடக்கி... பெங்களூர் தூக்கிச்சென்றனர் காக்கிகள். 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அபார்ட்மெண்ட் கதவை காக்கிகள் தட்ட.. டிரைவர்தான் என அசால்ட்டாக கதவைத்திறந்த சாமியார் அதிர்ந்தார். அவரை போலீஸ் டீம் காரில் ஏற்ற... அந்த நிலையிலும் சாமியார் “""என் பவர் தெரியாம என்மேல் கை வைக்கிறீங்க. நான் மதிய லஞ்ச்சை ஐ.ஜி.யோடும் நைட் டின்னரை ஏ.டி.ஜி.பியோடும் சாப்பிடறவன். ரொம்ப வருத்தப்படப் போறீங்க''’’ என தெனாவெட்டாக மிரட்ட... கொஞ்சமும் சளைக்காமல் அவரை சென்னைக்குக் கொண்டுவந்துவிட்டது ஸ்பெஷல் டீம்.
அவரை ரிமாண்டுக்கு கொண்டு செல்லும்வரை ""நான் சங்கரமடத்துக்கு நெருக்கமானவன். இதுவரை எந்த வழக்கிலும் என்னிடம் போலீஸ் இப்படி நடந்துகொள்ளவில்லை. என் பவரைக் காட்டினாத்தான் சரிப்படுவீங்க''’’ என காக்கிகளை எச்சரித்தபடியே இருந்தார். விசாரணைக்கு ரெடியான அதிகாரிகளோ... ""விசாரணையில் சாமியார் தொடர்பான மேலும் பல விவகாரங் கள் வெளியே வரும்'' என் கிறார்கள் அழுத்தமாய்.
No comments:
Post a Comment