Monday, November 2, 2009

கட்சியை விட்டுப் போகாதே'' -அ.தி.மு.க.

கட்சிக்காரர்களிடமும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை உண்டாக்கி யிருந்தது அக்டோபர் 28-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு.பொதுக்குழு போன்ற மாநிலம் முழுவது மிருந்தும் கட்சியினர் கலந்துகொள்ளும் விழாக் களின்போது ஜெ.வை வரவேற்று தலைமைக் கழகம், இளைஞரணி, மகளிரணி போன்ற அமைப்புகளின் தலைவர்கள் பேனர்கள் வைப்பது வழக்கம். சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜெ. கலந்துகொண்ட முதல் பொதுக்கூட்டமான ஆண்டிப்பட்டி பொதுக் கூட்டத்திற்குக் கூட தமிழகத்தின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் விளம்பர தட்டிகள் வைத்து ஜெ.வை வரவேற்றார்கள்.இந்த பொதுக்குழுவுக்காக அமைக்கப் பட்ட விளம்பர பேனர்கள் பெரும்பான்மை யானவை திருவள்ளூர் மாவட்டத்திற்கு இளை ஞர்கள், இளம்பெண்கள் பாசறை துவக்க விழாவுக் காக ஜெ. படத்துடன் டாக்டர் வெங்கடேஷை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள்தான்.செயற்குழு கூட்டம் நடந்த வானகரம் ஸ்ரீவாரு திருமண அரங்கில் இருந்த ஒரு ர.ர., ""இதப்பாருங்க சார் என ஒரு இருக்கையில் எழுதப்பட்ட வாசகத்தை நம்மிடம் சுட்டிக் காட்டினார். "திருமதி ஜெனிபர் சந்திரன்', "திருமதி கோகுல இந்திரா' என எழுதப்பட்ட இருக்கைகளுக்கு மத்தியில் "மதிப்பிற்குரிய சின்னம்மா' என ஒரு இருக்கையில் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதேநேரம் மேடையில் ஜெ.வுக்கு போடப்பட்டிருந்த இருக்கையில் எந்தப் பெயரும் இல்லை'' என்றார் வருத்தத்துடன்.பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்திருக்க... ஜெ.வை பார்ப்பதற்காக பத்தா யிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பொதுக்குழுவில் திரண்டிருந்ததுதான் அ.தி.மு.க.விற்கே உரிய பலமாகும் என்றனர் சீனியர் கட்சிக்காரர்கள். பொதுக்குழு செலவுக் காக தலைமைக்கழகம் கொடுத்த பத்துலட்ச ரூபாயில் யானைகள் வரவேற்பு, கேரளாவின் செண்டை மேளம், கன்னியாகுமரியின் பெண்கள் பேண்ட், பொதுக்குழுவில் தலைவர்கள் பேசும் பேச்சு முழுவதையும் தொண்டர்கள் கேட்கக்கூடிய அளவில் ஏகப்பட்ட ஸ்பீக்கர்கள்... இவற்றோடு ர.ர.க்களுக்கு சைவ-அசைவ சாப்பாடு என ஏகப்பட்ட ஏற்பாடுகளை தலைமைக்கழகம் செய்து அசத்தியது. பொதுக்குழுவுக்கு சசிகலா புடைசூழ வந்த ஜெ., அதற்கு முன்பு சம்பிரதாயமாக நடந்த செயற்குழு நடந்த அரங்கிற்குள் நுழைந்தார். அவர் அங்கு சென்றவுடனே, சாப்பாட்டிற்காக அமைக்கப்பட்ட பந்தலுக்குள் நுழைய தொண்டர்கள் அவசரப்பட்டார்கள். திருவள்ளூர் மா.செ. மாதவரம் மூர்த்தி தனது ரியல் எஸ்டேட் தொழிலில் உதவும் ஆட்களின் கையில் பெரிய பெரிய கம்புகளைக் கொடுத்து கூட்டத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார். சாப்பாட்டு அறைக்குள் நுழைய முயன்ற தூத்துக்குடி யைச் சேர்ந்த பெரியசாமி என்கிற தொண்டர், ரௌடி களின் தடியடியைத் தாங்க முடியாமல் சுருண்டுவிழ, அவர்மீது ஏறிய மற்ற ர.ர.க்கள் அவரை அடித்து மிதித்து துவைத்தார்கள். அதில் பெரியசாமி பலத்த காயமடைந்து அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இந்தத் தகவல் அப்பொழுது பொதுக்குழு மேடையிலிருந்த ஜெ.வின் காதுக்குப் போனது. பொதுக்குழு முடிந்ததும் தொண்டர்களோடு உட் கார்ந்து சாப்பிட திட்டமிட்டிருந்த ஜெ., அப்படிச் செய்தால் தன்னைப் பார்க்க முண்டியடிக்கும் தொண்டர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்படுமோ என அஞ்சி, தனக்காக சாப்பாட்டு அரங்கில் போடப்பட்ட ஏ.சி.யுடன் கூடிய ஏற் பாடுகளை நீக்கச் சொல்லிவிட்டார். பொதுக்குழுவில் வரவேற்புரை நிகழ்த்திய தம்பிதுரை முதல் வளர்மதி வரை எல்லோரும் தங்களை எப்படி யெல்லாம் ஜெ. வாழவைத்தார், எம்.எல்.ஏ. ஆக்கினார், எம்.பி. ஆக்கினார், பொறுப்புகளை கொடுத்தார் என்பதை மறக்காமல் ஒப்பித்தனர்.ஜெயக்குமாருக்கு வெறும் அஞ்சலி தீர்மானத்தை வாசிக்கும் பொறுப்பு மட்டும் அளிக்கப்பட அடுத்து வந்த ஓ.பி.எஸ். ஒருவிதமான நடுங்கும் குரலில் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். சென்னை மண்டல மா.செ.க்கள் சார்பாக பேச வந்த சேகர்பாபு, ""என் உடல், உயிர், சொத்து எல்லாம் அம்மா வுக்கே. அம்மாவுக்கு எவன் துரோகம் செய்கிறானோ அவன் குடும்பம் விளங் காமல் போகும்'' என்று பேச... "என்ன இவர், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல பேசுகிறாரே' என சிரித்தனர் ர.ர.க்கள்.இந்த பொதுக்குழுவில் ஆச்சரியமாகப் பேசியவர் முன்னாள் அமைச்சர் முத்து சாமி. தொட்டில் குழந்தைகள் திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்ற நல்ல திட் டங்களை பாராட்டி அவர் பேசப்பேச, ஜெ. புன்னகை யோடு ரசித்துக்கொண்டிருந் தார். அடுத்ததாக பேசிய பொன்னையன், ஈழத்தில் நடைபெற்ற தமிழ் இன அழித்தொழித் தலைப் பற்றிப்பேசி அனைவரின் கண்களையும் குளமாக்கினார்.பொதுக்குழுவில் பேசிய மற்றவர்கள் அனைவரும், ""அடுத்த ஆட்சி நமதே, அந்த ஆட்சியில் அவர்களைவிட அதிக பணம் சம்பாதிப்போம் ஆகவே கட்சியை விட்டு ஓடிப்போகாதே'' என்பதையே கிளிப்பிள்ளை சொல்வதைப்போல திரும்பத் திரும்ப பல வடிவங்களில் சொல்லிக்கொண்டிருந்தனர். ""இதுதான் பொதுக்குழு கூட்டப்பட்டதன் நோக்கமா?'' என்கிற கேள்வி ர.ர.க்கள் மத்தியில் எழுந்தது.இறுதியாகப் பேசிய ஜெ., வழக்கத்துக்கு மாறாக எம்.ஜி.ஆரின் புகழை அதிகமாகப் பாடினார். ""அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லாம் என் பிள்ளைகள். நான்தான் அம்மா. அடுத்த ஆட்சி நமது ஆட்சிதான்'' என்று சொல்லிவிட்டு தமிழக பத்திரிகைகளை ஒரு பிடி பிடித்தார்.அவர் பேசி முடித்துவிட்டு கிளம்பியபோது ஏற்பட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு ர.ர., ஜெ.விடம் பேட்டி எடுக்க காத்திருந்த ஒருபெண் நிருபரிடம் சில்மிஷம் செய்ய... சக பத்திரிகையாளர்கள் அதை வன்மையாகக் கண்டித்தனர். இந்த பரபரப்பைத் தவிர, அரசியல் தாக்கம் எதுவுமின்றி சம்பிரதாயமாக நடந்து முடிந்தது அ.தி.மு.க. பொதுக்குழு.

No comments:

Post a Comment